கம்பராமாயணம் 2695 · ஆரணிய 2.32

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் ஒளிர் நெடுமுடிப் புரந்தரன் - பொன்னால் விளங்கும் நீண்ட கிரீடத்தை உடைய இந்திரன்; இன்னன பல நினைந்து -இவ்விதம் பலவாறு எண்ணி; இயம்பா ஏத்தினன் - இராமனை வாயால் கூறி வணங்கினான்; இடை துன்னுதல் உளது என நனி துணிவான் - நடுவில் நிகழ்வது உள்ளது என மிகவும் துணிந்தவனாய்; தன்நிகர் முனிவனை - தனக்குத்தானே ஒப்பான சரபங்கரை நோக்கி; விடை தர என்னா -யான் செல ஒப்புதல் அளிப்பீராக என்று சொல்லி; போனான் -சென்றான்.

துன்னுதல் இடையுளது என்றது இராமன் வரவால் அங்கு நடக்க இருப்பதை ஓரளவு ஊகித்தான் என்பதாம். சரபங்க முனிவரின் தன்னிகரற்ற தன்மை, இந்திரன் வேண்டிய போது பிரமலோகப்பதவியை வேண்டாதொதுக்கியமையாலும் இராமன் அவரை நாடி வந்து அருள்தரும் பேறு பெற இருப்பதாலும் உணரப்பெறும். இந்திரன் இராமனிடம் விடை பெற்றான் என்பது அருத்தாபத்தி, புரந்தரன் - பகைவர் நரர்களை அல்லது உடல்களை அழிப்பவன், தர - அகர ஈற்று வியங்கோள். என்னா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So thinking of many such things, he praised him aloud;
  2. and, quite sure that something was about to take place there,
  3. to the sage who had no equal but himself he said, 'Give me leave,'
  4. and Purantaraṉ of the tall, gold-gleaming crown departed.

What the poem says

Having praised Irāmaṉ, Intiraṉ guesses that something momentous is about to happen at the hermitage and takes leave of the incomparable Carapaṅkaṉ, and implicitly of Irāmaṉ too. The sage's greatness shows both in his refusal of Piramaṉ's heaven and in Irāmaṉ coming to him in person.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉaṉa pala niṉaintu ēttiṉaṉ iyampā
'tuṉṉutal iṭai uḷatu 'eṉa naṉi tuṇivāṉ,
taṉ nikar muṉivaṉai 'tara viṭai 'eṉṉā
poṉ oḷir neṭu muṭip purantaraṉ pōṉāṉ.