கம்பராமாயணம் 2696 · ஆரணிய 2.33

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போனவன் அகநிலை புலமையின் உணர்வான் ,
வானவர் தலைவனை வர எதிர்கொண்டான் ;
ஆனவன் அடி தொழ , அருள்வர அழுதான்
தான் உடை இடவகை தழுவினன் நுழைவான் .

பொருள் · Meaning in Tamil

போனவன் அகநிலை புலமையின் உணர்வான் - போன இந்திரனின் மனநிலையை ஞானக் கண்ணால் சரபங்கர் அறிபவராகி; வானவர் தலைவனை வரவு எதிர் கொண்டான்- தேவர்களின் தேவனாம் இராமனை வரவேற்றான்; ஆனவன் - அப்படி வந்த இராமனும்; அடி தொழ - முனிவனின் அடிவணங்க, அருள் வர அழுதான் - அன்பு பெருகக் கண்ணீர் சிந்தினான்; தானுடை இடவகை தழுவினன் நுழைவான் - தானிருக்கும் குடிலிடத்து இராமனைத் தழுவிக் கொண்டு உட்புகுவார்.

புலமை - அறிவு, ஞானம். அருள் - இலக்கணையாய் அன்பிற்காயிற்று. இட வகை - இருப்பிடம், வீடு. தானுடை இடவகை தழுவினன் நுழைவான் என்பதற்குத் தன்னடியார் இருப்பிடமே தன் வைகுந்தம் எனக்கருதும் இராமன் நுழைந்தான் என்பர். அழுகை உவகைக் கலுழ்ச்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing by his wisdom the mind of the one who had gone,
  2. he went out to receive the Lord of the gods as he came;
  3. and as that one bowed at his feet, he wept as love welled up,
  4. and embracing him, went into the dwelling that was his own.

What the poem says

Carapaṅkaṉ understands why Intiraṉ has left and goes out to welcome Irāmaṉ, the god of gods. When Irāmaṉ bows at his feet, the sage weeps for joy and leads him into his hut. Another reading has Irāmaṉ entering the dwelling of his devotee as if it were his own heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōṉavaṉ aka nilai pulamaiyiṉ uṇarvāṉ,
vāṉavar talaivaṉai varavu etir koṇṭāṉ;
āṉavaṉ aṭi toḻa, aruḷ vara aḻutāṉ
tāṉuṭai iṭa vakai taḻuviṉaṉ nuḻaivāṉ.