கம்பராமாயணம் 2697 · ஆரணிய 2.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(சரபங்கர் இராமனை நோக்கி) ஏழையும் இளவலும் வருக என - சீதையும் இலக்குவனும் வருக என்று வரவேற்க, இனிதா வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் - நன்றாக, வாழ்விற்குரிய அவர்களொடு இராமனும் மகிழ்ச்சியால்; ஊழியின் முதல் முனி உறையுளை அணுக - பிரளய காலத்திற்கு முன்னம் இருந்த சரபங்கரின் வாழுமிடத்தைச் சேர; ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் - திருப்பாற் கடலில் யோக நித்திரை கொள்ளும் திருமால் இவனே என்று தெளிந்து சரபங்க முனிவர் களிப்பெய்தினார்.
ஏழை - பெண்ணாம் சீதையைக் குறித்தது. இக்காண்டத்தில் 'மழைக் கண் ஏழை' என வருவதும் காண்க (33/6), சரபங்கர் இராமனைப் பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் திருமால் என எண்ணிக்களித்தார். வாழிய என்பது அசை நிலையுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Let the lady and the younger one come,' he said; and gladly,
- with them, may they flourish, the bountiful one, in joy,
- drew near the dwelling of the sage, first among the ages;
- and the sage rejoiced, knowing him as the one who sleeps awake upon the sea.
What the poem says
The sage asks that Cītai and Ilakkuvaṉ be brought in too, and Irāmaṉ enters the hermitage with them. Carapaṅkaṉ, who has lived since before the last cosmic dissolution, is overjoyed to recognise in Irāmaṉ Tirumāl, who lies in yogic sleep on the ocean of milk.