கம்பராமாயணம் 2698 · ஆரணிய 2.35

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வயின் அழகனும் வைகினன் , அறிஞன்
செவ்விய அறவுரை செவிவயின் நுகரா
நவ்வியின் விழியவளொடும் , நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவில் .

பொருள் · Meaning in Tamil

அவ்வயின் - அவ்விடத்தில், அறிஞன் செவ்விய அறஉரை செவி வயின் உதவ - சரபங்கர் நல்ல அறமொழிகளைக் காதிலே கூறக் கேட்டு); அழகனும் நவ்வியின் விழியவளொடு - இராமனும் பெண்மானின் விழி போன்ற கண்களையுடைய சீதையோடு, நனி இருளைக் கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் வைகினன்- இருட்டை மிகுதியும் பற்றிய இரவுப் பொழுது ஒரு முடிவை அடையும் அளவு தங்கினான்.

இரவு முழுவதும் அறவுரை கேட்டுக் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர். இராமனை அழகன் எனக்குறிப்பதை 'அழகனும் அவளும் துஞ்ச' (2344), 'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் முகம்' (2748) என்ற தொடர்களில் காணலாம். சீதையைக் கூறியது இலக்குவனுக்கு உபலட்சணம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There the handsome one stayed, while the wise sage
  2. poured fine words of dharma into his ears,
  3. with her whose eyes were a doe's, until the night
  4. that had swallowed the deep darkness reached its end.

What the poem says

Irāmaṉ and Cītai, with Ilakkuvaṉ implied, spend the night in the hermitage, listening until dawn as the sage speaks of dharma. The poet often calls Irāmaṉ simply 'the handsome one'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vayiṉ aḻakaṉum vaikiṉaṉ, aṟiñaṉ
cevviya aṟa urai cevivayiṉ utava
navviyiṉ viḻiyavaḷoṭu, naṉi iruḷaik
kavviya nici oru kaṭaiyuṟum aḷaviṉ.