கம்பராமாயணம் 2699 · ஆரணிய 2.36

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விலகிடும் நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கரநிரையால்
உலகிடு நிறை இருள் உறையினை உரிவான் .

பொருள் · Meaning in Tamil

விலகிடு நிழலினன் - வீசுகின்ற ஒளியுடையவனும்; இலகிடு சுடரவன் - விளங்குகின்ற சுடர் உடையவனும் ஆன சூரியன்; இசையன திசை தோய் - தன் புகழ் போல் நான்கு திசைகளிலும் சென்று படிந்த; அலகிடல் அரிய - கணக்கிட்டுக் கூற முடியாத; வெயில் விரி அயில் வாள் - வெயில் விரிந்த கூரிய வாள்கள் போன்ற, தன் அவிர்கர நிரையால் - தன்னுடைய விளங்கும் கதிர்களாம் கைகளின் கூட்டத்தால்; உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் - உலகங்களை மூடிய நிறைந்த இருட்டாகிய போர்வையைக் கழற்றுவான்.

நிழல் இனன் எனப் பிரித்து ஒளியுடைய சூரியன் எனலுமாம். சூரியன் தன் கதிர்களால் இருள் நீங்கத் தோன்றியதை உருவகமாக்கியுள்ளார். உலகை மூடிய இருளைப் போக்குவது வெயில், அதனைப்பரப்புதற்குக் கதிர் ஆகியவற்றை முறையே உறையும் வாளும் கையுமாகப் படைத்துள்ளார். இசையன என்பதற்கு ஒன்றோடொன்று இணங்கி நிற்பன எனவும் உரைப்பர். கரம் - சிலேடை உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He of far-flung radiance, with swords of sharp, spreading sunlight,
  2. he of gleaming flame, reaching the quarters like his fame,
  3. with the countless ranks of his shining hands
  4. stripped from the world the full sheath of darkness laid upon it.

What the poem says

Dawn breaks. The sun is pictured drawing swords of sunlight with his countless hands, his rays, which spread to every direction like his fame, and stripping off the sheath of darkness that covered the world. The Tamil word for hand also means ray, so the image rests on a pun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vilakiṭu niḻaliṉaṉ veyil viri ayil vāḷ
ilakiṭu cuṭaravaṉ icaiyaṉa ticai tōy
alakiṭal ariya taṉ avir kara niraiyāl
ulaku iṭu niṟai iruḷ uṟaiyiṉai urivāṉ.