கம்பராமாயணம் 2702 · ஆரணிய 2.39

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ ?
மான் வரு தனி உரி மார்பினை ! 'எனலும் ,
மீன் வரு கொடியவன் விறல் அடு மறவோன் ,
ஊன் வரும் உவகையின் உரை நனி புரிவான் .

பொருள் · Meaning in Tamil

மான் வரு தனிஉரி மார்பினை - மானிடத்து அடையப் பெற்றதான ஒப்பற்ற தோலைத் தரித்த மார்பை உடைய முனிவ!; யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ எனலும் - நான் இங்கு வந்த இப்பொழுது இப்படி உயிர்விடும் செயலை நீர் செய்வது ஏனோ என்று இராமன் கேட்டதும், மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் - மீன் உரு எழுதிய கொடியை உடைய மன்மதனின் வலிமையை அழித்த தவவலியுடைய சரபங்கர்; ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் - தன் உடலைவிட்டு நீங்கும் மகிழ்ச்சி மிகுந்து பின்வரும் சொற்களை நன்கு விரும்பிச் சொன்னார்.

அமைதி- சமயம், தவம்புரி முனிவர் மான்தோல் போர்த்தல் மரபு. திருமுருகாற்றுப்படையில் 'மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்' (முருகு. 128- 9) என வருதல் காண்க. மீன்வரு கொடியவன்விறல் அடும் மறவோன் என்ற தொடர் சரபங்கர் எனப் பெயர் பெற்றதற்குக் காரணமாக அமைகிறது. விறல் அடும் அறவோன் எனவும் பிரிக்க இடமுண்டு. ஊன் ஆகுபெயர். எவனோ - ஓகாரம், அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Why do this at the very moment I have come,
  2. O you whose breast wears the matchless deerskin?' At this,
  3. the warrior who crushed the might of him whose banner bears the fish,
  4. in the joy of leaving the flesh, spoke with all his heart.

What the poem says

Irāmaṉ asks why the sage would end his life just as he has arrived. Carapaṅkaṉ, wearing the deerskin of an ascetic, is called the one who broke the power of Kāmaṉ, the love god whose banner bears a fish; this explains his name, 'breaker of the arrows'. Glad to be leaving his body, he replies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉ varum amaitiyiṉ itu ceyal evaṉō?
māṉ varu taṉi uri mārpiṉai! 'eṉalum,
mīṉ varu koṭiyavaṉ viṟal aṭum maṟavōṉ,
ūṉ viṭum uvakaiyiṉ urai naṉi purivāṉ.