கம்பராமாயணம் 2703 · ஆரணிய 2.40

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருதிகொல் எனும் நிலை உடையேன் ;
போயின இரு வினை புகலுறு விதியால்
மேயினை ; இனி ஒரு வினை இலை விறலோய் !

பொருள் · Meaning in Tamil

விறலோய் - வெற்றி வீரனே!; யான் ஆயிரமுகம் உளதவம் அயர்குவென் - நான் பலவகைப்பட்ட தவங்களைச் செய்பவன்; நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் - நீ இவ்விடத்தில் எழுந்தருள்வாய் என்னும் நினைவு மேற் கொண்டுள்ளேன்; புகலுறு விதியால் போயின இருவினை - நேரிடும் முறைப்படி இரண்டு வினைகளும் அழிந்தன; மேயினை -அதன் பயனாய் நீ இங்கு எனக்கு அருள்புரிய வந்தாய்; இனி ஒரு வினை இலை - இனிமேல் நான் செய்யத்தக்க செயல் வேறு இல்லை.

ஆயிரம் உகம் என ஆயிரக்கணக்கான யுகங்கள் என்பாருமுளர். புகலுறு விதி - சிறப்பித்துக்கூறும் விதியுமாம். தவம் செய்து இறைவன் அருள் பெறுவர் வேறு செய்யதக்க வினை இல்லை என்ற உண்மையை இது விளக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I have performed penance of a thousand kinds;
  2. I held the thought that you would come here;
  3. my deeds of both kinds are gone, by the decree that was to be,
  4. and you have come; no deed is left for me now, mighty one!

What the poem says

Carapaṅkaṉ explains that he has practised every kind of penance, some say for a thousand ages, always hoping Irāmaṉ would come. Now that both his good and bad karma are spent, Irāmaṉ has come to bless him, and nothing remains for him to do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira mukam uḷa tavam ayarkuveṉ yāṉ
nī ivaṇ varukuti eṉum niṉaivu uṭaiyēṉ;
pōyiṉa iru viṉai pukaluṟu vitiyāl
mēyiṉai; iṉi oru viṉai ilai viṟalōy!