கம்பராமாயணம் 2704 · ஆரணிய 2.41

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திரன் அருளினன் இறுதிசெய் பகலா
வந்தனன் ,'மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனன் 'என ,'அது சாரலென் 'உரவோய் !
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் .

பொருள் · Meaning in Tamil

உரவோய் - வலிமை கொண்டவனே; இந்திரன் வந்தனன் - இந்திரன் இங்கு வந்தான்; இறுதி செய்பகலா - அழிகின்ற காலம் வரை; மலர் அயன் உலகம் தந்தனென் - பிரமனின் சத்தியலோகத்தை (உனக்குத்) கொடுத்தேன்; மருவுதி என அருளினன் - தங்குவாயாக என்று சொன்னான்; அது சாரலென் - அதை நான் சேர விரும்பவில்லை; அந்தம் இல் உயர்பதம் அடைதலை முயல்வேன் - அழிவு இல்லாத உயர்ந்த பரமபதத்தைச் சேர்வதற்கு முயற்சி செய்வேன்.

'பிரமதேவன் அழைத்தான். உலகம் அழியும் அளவு சத்திய உலகில் தங்குக' என இந்திரன் பிரமனின் வேண்டுகோளைத் தெரிவித்தும் சரபங்கர் பரமபதம் அடைய முயல்வதாக அவனளித்த பேற்றை மறுத்து விட்ட கருத்து புலப்படும். இதனால் அவர் பரமபதத்தையே மேலாகக் கொண்டமை உணரப்பெறும். இறுதி செய் பகலா- நேற்று மாலைப் பொழுது என்பாருமுளர். உரம் -அறிவுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Intiraṉ came and graciously said, 'Until the day that ends all,
  2. dwell there: the world of Ayaṉ of the flower
  3. I have given you.' 'I will not go there,' I said, O mighty one;
  4. I strive to reach the high state that has no end.

What the poem says

The sage tells Irāmaṉ of Intiraṉ's message, that he could live in Piramaṉ's world until the end of the cosmic age, and of his refusal. He aims instead at the highest state, liberation, which never ends.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ aruḷiṉaṉ iṟuti cey pakalā
vantaṉaṉ,'maruvuti malar ayaṉ ulakam
tantaṉeṉ 'eṉa,'atu cāraleṉ 'uravōy!
antam il uyar patam aṭaitalai muyalvēṉ.