கம்பராமாயணம் 2716 · ஆரணிய 3.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுந்தனர் எய்தினர் - (அம்முனிவர்கள்) புறப்பட்டு அணுகி; இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக்குரிசில் வீரனை - கரிய மேகத்தின் கொழுந்து போல அங்கு நின்ற வீரனாகிய அந்த இராமனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார்- பொங்கி எழும் அன்போடு அடைந்தார்கள்; (அப்போது), அவன் தொழும் தொறும் தொழும் தொறும் ஆசி சொல்லுவார் - அந்த இராமன் தம்மைத் தனித்தனியே தொழுது வணங்கும் போதெல்லாம் வாழ்த்தினார்கள்.
இராமன் எழுந்தருளியதைக் கேட்டதும் காலம் தாழ்த்தாது முனிவர்கள் வந்தமை தோன்ற 'எழுந்தனர் எய்தினர்' என்றார். செயல் விரைவு தோன்றப் பாடும் நிலையை இராமன் வில்லை எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (699) என்பது போல இதுவும் குறிப்பால் உணர்த்தும். திருஅவதாரப் படலத்தில் கோசலை இராமனைப் பெற்றெடுத்த போது 'கருமுகிற் கொழுந்து எழில்காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனள்' (282) என்பார். கருமேகம் கைம்மாறு கருதாது அருள்செய்தற்கும் சான்றாம். இராமன் திருமாலின் அவதாரமாயினும் தானெடுத்த மானிடக்கோலத்திற்கேற்ப முனிவரை வணங்கினான் என்க. முனிவர்களும் பொங்கும் அன்பால் ஆசி அருளினர். 'தொழும் தொறும் தொழும்தொறும்' என்ற அடுக்கு, மிகுதிப் பொருளைக் காட்டும். குரிசில் - அரசகுமரன். பெருமைக்குரியோனுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They rose, they came; to that princely hero standing
- like the tender shoot of a dark cloud
- they drew near with a love that poured forth; and each time
- he bowed to them, and bowed again, they blessed him.
What the poem says
The quick verbs 'they rose, they came' show how eagerly the sages hurried to Irāmaṉ, who stands there like the young shoot of a rain-cloud, an image used at his birth. Though he is Tirumāl, he behaves as the human prince he has become and bows to each sage, and each time they bless him.