கம்பராமாயணம் 2717 · ஆரணிய 3.10

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனைவரும் இனியது ஓர் சாலை கொண்டு ஏகி -அம்முனிவர்கள் எல்லாரும் வசித்தற்கு இனிதாகிய ஒரு பன்னசாலைக்கு இராமன் முதலியோரை அழைத்துச் சென்று; 'இவ்வயின் நனி உறை' என்று -இவ்விடத்தில் நன்றாகத் தங்கியிருப்பீராக என்று சொல்லி; அவற்கு அமைய நல்கி - இராமனுக்கு ஏற்றவற்றைப் பொருந்தும்படி அளித்து; தாம் தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் - தாம் தத்தம் தனி இடங்களை அடைந்து தங்கியிருந்து அதன் பின் அந்த முனிவர்கள்; அல்லல் சொல்லுவான் எய்தினர் - அரக்கரால் தாம்படும் துன்பங்களைக் கூற (இராமனிடம்) வந்தார்கள்.

இராமனின் உள்ளத்தில் தங்கள் துன்பத்தை உய்த்துணரும் வகையில் அனைவரும் துன்புற்றவரே என அறிவிக்க எய்தினர். நனி உறை என்பதற்குப் பல நாள் தங்குக எனவுமாம். அமையம் நல்கி எனக் கொண்டு இருப்பிடம் தந்து இளைப்பாறப் பொழுதும் அளித்து எனவும் கொள்ளலாம். அமையம் - ஆறுதல் எனவுமாம். (குறள். 1178)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Taking them to a pleasant hut and saying, 'Here
  2. stay long and well,' giving him all that was fitting, they
  3. went to their own places and rested; then the great ascetics,
  4. all of them, came to tell their sorrows.

What the poem says

The sages lodge the travellers in a comfortable hut, provide what they need and let them rest. Then they all come back together to tell Irāmaṉ of their sufferings; their coming as a body shows that every one of them has been harmed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉiyatu ōr cālai koṇṭu ēki,'iv vayiṉ
naṉi uṟai 'eṉṟu avaṟku amaiya nalka tām
taṉi iṭam cārntaṉar taṅki, mātavar,
aṉaivarum eytiṉar allal colluvāṉ.