கம்பராமாயணம் 2718 · ஆரணிய 3.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயனும் எய்திய முனிவரை இறைஞ்சி - இராமனும் தன்னிடம் வந்த அம்முனிவர்களை வணங்கி, ஏத்துஉவந்து இருந்தனன் -அவர்களை அன்புடன் துதித்து இருந்தவன் ஆகி; அருள் என் என்றலும் -இப்போது நீங்கள் எனக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள் என்று கேட்டதும், வையகம் காவலன் மதலை! - உலகங்களைக் காத்தலில் வல்லவனாம் தயரதனின் மகனே!; வந்தது ஓர் வெய்ய வெங்கொடுந்தொழில் விளைவு கேள் எனா - எங்களுக்கு நேரிட்டதாகிய ஒரு மிகவும் அதிக்கொடுமையான செய்கைகளின் பெருக்கத்தை நீ கேட்டருள் என்று.
ஏத்து உவந்து என்பதற்கு அம் முனிவர்கள் செய்த துதிகளுக்கு மனம் மகிழ்ந்து என்றும் கொள்வர். வையகம் காவலன் மதலை என்றதால் தந்தையின் கடமை மகனுக்கும் உண்டு என்பது குறிப்பு. வெய்ய வெங் கொடு - ஒரு பொருட் பன்மொழிகள். மனத்தாலும் மொழியாலும் உடலாலும் கொடுமைக்குட்பட்டனர் என்பதைக் குறிக்க மும்முறை கூறினார் எனலுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bowing to the sages who had come, and praising them gladly,
- the lord sat with them and asked, 'What is your command?' And they said,
- 'Son of the guardian of the earth! Hear what has befallen us,
- the harvest of cruel, fierce and savage deeds.'
What the poem says
Irāmaṉ bows to the sages and asks what they would have him do. They address him as the son of the king who protects the earth, hinting that a father's duty of protection now falls to the son, and begin to tell him of the demons' cruelty. The three words for cruelty stress how much they have suffered in mind, word and body.