கம்பராமாயணம் 2766 · ஆரணிய 3.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனி அவ்வயின் ஏகி இருந்து உறைமின் என்றான் - இனிமேல் அவ்விடத்திற்கு நீங்கள் சென்று அங்குத் தங்கியிருந்து வாழுங்கள் என்று அகத்திய முனிவர் கூறினார்; மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் - முகில் போன்ற கரிய நிறங்கொண்ட இராமனும் அகத்தியரைத் தொழுது அவ்விடத்திலிருந்து செல்ல அனுமதி பெற்றான்; பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்போக - தேன் பாகு போன்ற இனிய சொற்களை உடைய சீதையோடு தம்பியாகிய இலக்குவனும் அன்போடு பின்போக, முனி சிந்தை தொடர - அகத்திய முனிவரின் மனம் பின் தொடரவும்; கடிது போனான் - விரைவாக அப்பால் சென்றான்.
மேக நிற வண்ணன் - முகிலின் தன்மை போல் கைம்மாறு கருதாது அருள் புரிபவன். பாகு அனைய சொல்லி' எனச் சீதையை இங்குக் குறிப்பிட்டது போல முன்னர் மிதிலைக் காட்சிப் படலத்தில் 'பாகு ஒக்கும் சொல் பைங்கிளி யோடும்' எனக் குறிக்கப் பெறுவாள் (500). சிந்தை தொடர்தல் என்பது அன்புடையார் பிரியும் போது அவரைப்பின் பற்றி மனமும் நினைக்கும் என்பதைக் குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Go now, and stay and dwell in that place,' he said;
- and he of the colour of the rain cloud bowed and took his leave;
- with her whose words are like syrup, and his brother following lovingly behind,
- he went swiftly, the sage's thoughts following him.
What the poem says
Akattiyaṉ sends them on to Pañcavaṭi. Irāmaṉ bows and takes leave, and sets off quickly with Cītai, whose speech is sweet as syrup, and the devoted Ilakkuvaṉ behind them. The sage's heart follows them as they go, as loving hearts follow those who part from them.
The cloud colour also suggests a giver like the rain cloud, which bestows without seeking any return. This verse closes the canto of Akattiyaṉ.