கம்பராமாயணம் 2775 · ஆரணிய 4.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று - மிக உயர்ந்த பெரிய மலை ஒன்றில் தங்கியிருந்து; அது தாங்கலது இருநிலம் தாழ்ந்து தாழ்வுற - அம்மலை தன்னைத் தாங்க முடியாமல் பெரிய பூமியில் புதைந்து ஆழ்ந்து போக; வீங்கிய வலியினில் இருந்த வீரனை - மிக்க பலத்தோடு இருந்த வீரனாம் அச்சடாயுவை, அவர் ஆங்கு அயிர்க்கும் சிந்தையார் அணுகினர் - இராமலக்குவர் அவ்விடத்தில் ஐயமுற்ற மனமுடையவராய் அருகே சென்றனர்.
அவர் தங்கியிருந்த மலை அவர் உடற் பொறையைத் தாங்காமல் பூமியில் ஆழ்ந்ததால் அவர் வலிமை புலப்படும். சடாயு தங்கியிருந்த மலை பிரசரவணம் எனப்படும். இராமலக்குவர் ஐயுறக்காரணம் அவருடைய பேருருவைக் கண்டு அரக்கனோ என எண்ணியதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Perched on a tall, towering mountain, which, unable to bear him,
- sank down low into the broad earth,
- there sat the hero in his swelling might;
- and they approached him there, with doubt in their minds.
What the poem says
The long sentence describing Caṭāyu ends here. He sits on a high mountain that sinks into the ground under his weight, a measure of his strength. Irāmaṉ and Ilakkuvaṉ draw near warily, wondering from his enormous size whether he might be a demon.