கம்பராமாயணம் 2784 · ஆரணிய 4.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரைத்தலும் - என்று அவர்கள் சொன்னதும்; பொங்கிய உவகை வேலையன் - கிளர்ந்த மகிழ்ச்சியாம் கடல் போன்றவரான அச் சடாயு; தரைத் தலை இழிந்து அவர்த் தழுவு காதலன் - அம்மலை உச்சியிலிருந்து பூமியில் இறங்கி வந்து அவர்களைத் தழுவிக் கொள்ளும் அன்புடையவனாய், விரைத் தடந்தாரினான் - மணம் பொருந்திய பெரியமாலை அணிந்தவனான; வேந்தர் வேந்தன் தன் - அரசர்க்கரசனான தயரதனின்; வரைத் தடந்தோள் இணை வலியவோ என்றான் - மலை போல அகன்று விளங்கும் தோளிரண்டும் வலியனவாக உள்ளனவா எனக் கேட்டார்.
தயரதன் மைந்தர் எனக் கேட்டதும் சடாயு தன் நண்பனின் இனிய வாழ்வு பற்றி வினவினார் என்க. அரசர் எனும் முறையால் 'தோள் இணை வலியவோ' என்று கேட்டார். பகைவர்களை அழித்து, உலகைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏந்தியவை அரசர்களின் தோள்களாம். 'வரை தடந்தாரினிர்' எனக் கொண்டு இராமலக்குவரை விளித்தாகக் கொள்வதுமுண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as they said it, he, a sea of welling joy,
- came down to the ground, longing to embrace them,
- and said, 'Are the mountain-broad shoulders, both of them,
- of the king of kings with the large fragrant garland strong?'
What the poem says
On hearing that they are Tacarataṉ's sons, Caṭāyu is flooded with joy. He comes down from his mountain to embrace them and at once asks after his friend, in the way one asks after a king: are his broad shoulders, which bear the burden of protecting the world, still strong?