கம்பராமாயணம் 28 · பால 2.8

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெள் விளி சிறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவ மாந்தி
வள் விசி கருவி பம்ப வயின் வயின் வழங்கு பாடல்
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும் பொன் பள்ளி
எள் அரும் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

தெள்விளிச் சிறியாழ்ப்பாணர் - தெளிந்த இசை கொண்ட சிறிய யாழையுடைய பாணர்கள்; தேம்பிழி நறவம் மாந்தி - இனிமையாய் வடிக்கப்பட்ட மதுவினைக் குடித்து; வள் விசிக் கருவி பம்ப - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முழவுகள் ஒலிக்க; வயின் வயின் வழங்கு பாடல் - ஆங்காங்கே பாடப்படுகின்ற பாடல்கள்; வெள்ளி வெண் மாடத்து உம்பர் - வெள்ளை வெளேரென ஒளிவீசும் மாடங்களின் மேல்; வெயில் விரி பசும்பொன் பள்ளி - ஒளி உமிழும் பசும்பொன்னாலான கட்டிலிலே (உறங்குகின்ற); எள்ள அருங்கருங்கண் தோகை - பழிப்பதற்கு அரிய கருமை நிறக் கண்களையுடைய மயில்போலும் மகளிரை; இன்துயில் எழுப்பும் - இனிய உறக்கத்தி லிருந்து எழுப்பும்.

'வயின் வயின் வழங்கு பாடல் துயில் எழுப்பும்' என வினை முடிபு கொள்க. பாணர்கள் பாடும் இசையால் துயில் நீங்குமளவு மென்மையும் வளமையும் உடையவராகச் செல்வ மங்கையர் கோசலத்தில் வாழ்ந்தனர். எள்ள அரும் என்பது யாப்பியல் வடிவில் அகரம் தொக்கு எள்ளரும் என நிற்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bards with small lutes of clear tone, having drunk the sweet pressed wine,
  2. while the tight-strapped drums boom, sing songs in place after place;
  3. and atop the silver-white mansions, on beds of green gold that spread their light,
  4. those songs wake from sweet sleep the peacock-like women with flawless dark eyes.

What the poem says

A morning scene in Kōcalam. Wandering bards, having drunk sweet wine, play their small lutes and sing to the beat of leather drums all over the land. High in the gleaming white mansions, wealthy women with lovely dark eyes lie asleep on beds of gold, and it is only the bards' music that wakes them.

The verse conveys the ease and refinement of life in the country: the women are so delicate, and life so gentle, that they rise not to harsh noise but to song.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teḷ viḷic ciṟiyāḻp pāṇar tēm piḻi naṟavam mānti
vaḷ vicik karuvi pampa vayiṉ vayiṉ vaḻaṅku pāṭal
veḷḷi veṇ māṭattu umpar veyil viri pacum poṉ paḷḷi
eḷḷa aruṅ karuṅ kaṇ tōkai iṉ tuyil eḻuppum aṉṟē.