கம்பராமாயணம் 2885 · ஆரணிய 5.71

Section ஆரணிய காண்டம் / 5. சூர்ப்பணகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நின்றிலள் அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் - (சூர்ப்பணகை) அங்கு நிற்காமல் இராமனைத் தான் அடைந்து பெறும் வாழ்வை எண்ணி அவ்விடம் விட்டுச் சென்றவள்; இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா - இன்று நான் இவன் மார்பைத் தழுவவில்லை என்றால் என் உயிரை விடுவேன் என்று எண்ணி; பொன் திணி சரளச் சோலை பளிக்கறைப் பொதும்பர் புக்காள் - பொன் அடர்ந்துள்ள தேவதாரு மரங்கள் நிறைந்த சோலையைக் கடந்து பளிங்கு மண்டபம் அமைந்த சோலையுள் புகுந்தாள்; பரிதி மேல் பால் சென்றது - கதிரவன் மேற்றிசையில் சென்று மறைந்தான்; செக்கர் வந்து இறுத்தது - அங்குச் செவ்வானம் வந்து சேர்ந்தது அன்று, ஏ - அசைகள்.

ஆகம் - உடல் எனலும் ஆம். இராமனைச் சேராவிடில் உயிர் இழப்பேன் எனக் கூறியது கொண்டு சூர்ப்பணகையின் விரக வேதனை புலப்படும். பளிக்கு அறை எனக் கொண்டு பளிங்குப் பாறை என்பாருமுளர். 'அகலறை' என்பதற்கு அகன்ற பாறை என நச்சினார்க்கினியர் உரை காண்பர் (மலைபடு கடாம், 133). திருமால் வீற்றிருக்கும் நூற்றெட்டுத் தலங்களில் திருவெள்ளறை என்ற தலத்தில் வெண்பாறையில் கோயில் அமைந்திருப்பதையும் சான்று கூறுவர். சூர்ப்பணகையின் ஒரு தலைக் காமம் மேலும் பெருகுதற்கு மாலை நேரமும் செவ்வானமும் துணை செய்கின்றன. பொதும்பர் என்பதைக் குறுங்காடு எனவும் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She did not stay; thinking of a way to reach him, she went off;
  2. "If I do not embrace his chest today, I will lose my life," she said,
  3. and entered a grove of sarala trees dense with gold, a bower with a crystal chamber;
  4. the sun had gone to the west, and the red glow of evening had come.

What the poem says

Cūrppaṇakai leaves, still plotting how to win Irāmaṉ and certain she will die without him. She goes into a grove of deodar trees with a crystal pavilion, or a crystal rock, as some read it.

The sun sets and the sky turns red. Evening, the time when lovers apart suffer most, feeds her one-sided passion. A long description of her lovesick night now begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟilaḷ; avaṉaic cērum neṟiyiṉai niṉaintu pōṉāḷ;
'iṉṟu ivaṉ ākam pullēṉ eṉiṉ, uyir iḻappeṉ 'eṉṉā
poṉ tiṇi caraḷac cōlaip paḷikkaṟaip potumpar pukkāḷ;
ceṉṟatu, pariti mēl pāl; cekkar vantu iṟuttatu aṉṟē.