கம்பராமாயணம் 2958 · ஆரணிய 6.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சொரிந்த சோரியள் - பெருகுகின்ற இரத்தத்தையுடையவளும்; கூந்தலள் - (விரிந்த) தலைமயிரையுடையவளும்; தூம்பு எனத் தெரிந்த மூக்கினள் - மதகு போலத் துவாரங் கொண்ட மூக்கையுடையவளும்; வாயினள் - (அகன்ற) வாயையுடையவளுமாகிய சூர்ப்பணகை; மேல் செக்கர் விரிந்த மேகம் என - மேலே செவ்வானம் படர்ந்துள்ள மேகம் போல; இருந்த மாக்கரன் - (அவையில்) இருந்த பெருமை மிக்க கரனுடைய; தாள் இணையின் மிசை - இரண்டு கால்களின் மேலும்; விழுந்தாள் - வீழ்ந்தாள்.
'உங்களுக்குக் கூற்றுவனான கரனை இப்போதே கொண்டு வருகின்றேன் என்று மூண்ட வயிரத்தோடு சென்ற சூர்ப்பணகை அறுபட்ட தன் உறுப்புக்களிலிருந்து இரத்தம் பெருக, விரித்த கூந்தலோடும் பெரிய வாயினாற் கதறிக் கொண்டு சபையில் வீற்றிருந்த கரனுடைய அடிகளில் வீழ்ந்தாள் என்பது. அவளது உடம்பில் பெருகும் இரத்தப் பெருக்கிற்கும், செம்பட்டை மயிர்க்கும் செவ்வானமும், கரிய உடம்புக்கு மேகமும் உவமைகளாயின. அரோ : ஈற்றசை; உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the two feet of mighty Karaṉ where he sat,
- streaming blood, hair loose, her nose
- showing holes like a sluice, mouth gaping, like a cloud
- spread over the red evening sky, she fell down.
What the poem says
This verse opens the canto of the slaying of Karaṉ. Cūrppaṇakai, true to her threat, rushes to her brother Karaṉ, who rules the region, and throws herself at his feet as he sits in his assembly.
Blood pours from her wounds, her hair is loose, her nose is two open holes like a sluice and her mouth gapes wide. She looks like a dark cloud spread across a red sunset: the red sky is the blood and her reddish hair, the cloud her black body.