கம்பராமாயணம் 2960 · ஆரணிய 6.3

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாக்கின் கோபப் புகை முந்து வாயினான் ,
நோக்கிக்'கூசலர் , நுன்னை இத்தன்மையை
ஆக்கிப் போனவர் , ஆர்கொல் ? 'என்றான் ; அவள்
மூக்கின் சோரி முழீஇக்கொண்ட கண்ணினான் .

பொருள் · Meaning in Tamil

அவள் மூக்கின் சோரி - அந்தச் சூர்ப்பணகையின் மூக்கிலிருந்து வடிந்த இரத்தத்தில்; முழீஇக் கொண்ட - மூழ்கடிக்கப்பட்ட; கண்ணினான் - கண்களையுடையவனும்; வாக்கிற்கு ஒக்க - (தன் வாயிலிருந்து பிறக்கும்) சொற்களுக்கு ஒத்தபடி, புகை முந்து வாயினான் - புகை முந்தி வெளிப்படுகின்ற வாயையுடையவனுமான கரன்; நோக்கி - (அந்தச்) சூர்ப்பணகையைப் பார்த்து; கூசலர் - கூச்சமில்லாதவர்களாய்; நுன்னை - உன்னை; இத் தன்மையை ஆக்கிப் போனவர் - இவ்வாறு அலங்கோலப்படுத்திச் சென்றவர்; ஆர் கொல் என்றான் - யார் என்று கேட்டான்;

வாக்கிற்கு ஒக்க புகை - அவனது வாயிலிருந்து பின் வந்த பேச்சாகிய தீக்கு ஒப்ப, முன் எழுந்து வந்தது புகை.

இன்னாரென்று அறியாததால் 'போனவர் என்று பன்மையால் கூறினான்; துணியலாகாத இடத்துப் பன்மையால் கூறுதல் மரபு. முழீஇ - சொல்லிசையளபெடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He, whose mouth sent out smoke ahead of his words,
  2. looked and said, "Shameless ones! Who are they who made you like this
  3. and went away?" So he asked, he whose eyes were drowned
  4. in the blood from her nose.

What the poem says

Karaṉ, seeing his sister's state, is so enraged that smoke pours from his mouth before his words, as smoke goes before fire, and his eyes fill with the blood streaming from her nose.

He asks who has done this to her. Not yet knowing whether it was one person or many, he speaks of the culprits in the plural, as Tamil custom does when the person is unknown.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vākkiṟku okka pukai muntu vāyiṉāṉ,
nōkka'kūcalar, nuṉṉai it taṉmaiyai
ākkip pōṉavar, ārkol? 'eṉṟāṉ; avaḷ
mūkkiṉ cōri muḻīik koṇṭa kaṇṇiṉāṉ.