கம்பராமாயணம் 2962 · ஆரணிய 6.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன் வலி - உனது வலிமையை; ஒன்றும் நோக்கலர் - சிறிதும் கருதுகின்றார்களில்லை; ஓங்கு அறம் நின்று நோக்கி - மேலான தரும வழிகளில் தாமும் நின்று ஆராய்ந்து; நிறுத்தும் நினைப்பினார் - அத் தருமத்தை எங்கும் நிலைபெறச் செய்யும் கருத்துடையவர்; வென்றி வேல் கை நிருதரை - வெற்றி தரும் வேலேந்திய கைகளையுடைய அரக்கரை; வேர் அற - அடியோடு; கொன்று நீக்குதும் - 'கொன்று தொலைப்போம்'; என்று உணர் - என்று தீர்மானித்துள்ள; கொள்கையார் - கோட்பாடு உடையவர்கள்.
அவர்கள் உன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை; அறமாகிய பயிரைச் செழிக்க வைக்க அதற்குப் பகைவர்களான அரக்கர் என்னும் களைகளை வேரோடு அழித்துக் களையும் துணிவினர் என்றாள் சூர்ப்பணகை என்பது.
இங்கே 'தாபதர் அறம் நிறுத்தும் நினைப்பினர்; உன் வலி நோக்கலர்; இச் செய்தி முன் கூறப்பட்டுள்ளது என்று வேண்டாத செய்திகளை முற்கூறியது கரனின் வெறுப்பையும் கோபத்தையும் தூண்டுதற்காக எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They think nothing at all of your strength; they mean
- to stand by lofty dharma, watch over it and establish it;
- "We will kill the nirutas with victorious spears in their hands
- and root them out": that is the resolve they have formed.
What the poem says
Cūrppaṇakai goes on to stir up Karaṉ's anger. The two men, she says, think nothing of his power. Their aim is to uphold dharma everywhere, and to that end they have vowed to destroy the rākṣasas root and branch, like weeds pulled from a field of grain.
She brings in these details, not strictly needed to answer his question, to inflame his pride and fury.