கம்பராமாயணம் 2963 · ஆரணிய 6.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒரு பேதை - (அவர்களோடு உள்ள) ஓர் இளம் பெண்; மண்ணில் - இவ்வுலகத்திலும்; நோக்க அரு வானினில் - எளிதாகக் காண முடியாத மேலுலகத்திலும்; மற்றினில் - (இந்த மண், வானம் அல்லாத) பாதாளத்திலும்; எண்ணி நோக்குறின் - (இவளுக்கு ஒப்பாவார் யாரென்று) கருதிப் பார்க்குமிடத்து; யாவரும் நேர்கிலா - ஒருவரும் ஒப்புமை ஆகமாட்டாத; பெண்ணின் நோக்கு உடையாள் - பெண்ணழகு முழுவதும் உடையவள்; என் கண்ணின் நோக்கி - என் கண்களால் பார்த்து; உரைப்ப அருங்காட்சியாள் - வாயால் எடுத்துச் சொல்லமுடியாத அரிய தோற்றமுடையவள்.
சீதையின் அழகு மிகுதியும், எவ்வளவு காணினும் முற்றும் காண முடியாத கட்டழகின் மிகுதியும், அவ் விரண்டும் வாயினால் எடுத்துச் சொல்லமுடியாத தன்மையும் ஈற்றடியில் புலப்படும்.
நோக்கு: அழகு - 'நோயிகந்து நோக்கு விளங்க' - (மதுரைக்: 13) மற்றினில்: இடைச்சொல் உருபேற்று வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On earth, in the sky that is hard to see, and in the other world,
- if one searches and considers, none can equal her:
- a young woman with all the beauty of womanhood, whom my
- eyes have seen yet whose sight is beyond words to tell.
What the poem says
Cūrppaṇakai now mentions the young woman with the brothers. On earth, in heaven or in the netherworld, she says, no one can match her beauty.
She has seen Cītai with her own eyes, yet cannot describe her. She has a reason for bringing Cītai up: this is the first step of the scheme that will lead to the abduction.