கம்பராமாயணம் 2980 · ஆரணிய 6.23

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ';
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அழை என் தேர் ';'எனக்கு ஆக்கு வன் போர்ப் படை ';
'உழையர் ஓடி , ஒரு நொடி ஓங்கல் மேல்
மழையின் மா முரசு எற்றுதிர் வல் ;' என்றான் ,
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் .

பொருள் · Meaning in Tamil

முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் - குகைக்குள் பதுங்கியிருக்கும் கொடிய சிங்கங்கள் அஞ்சும்படி முழக்கம் இடுபவனான கரன்; என் தேர் அழை - என் தேரை இங்கே அழையுங்கள்; வெம் போர்ப் படை எனக்கு ஆக்கு - எனக்கு வலிய போர் செய்வதற்குரிய படைக் கலங்களை ஆக்கு; வல் உழையர் ஓடி - விரைவில் ஏவலாட்கள் ஓடிச் சென்று; ஒரு நொடி ஓங்கல்மேல் - ஒரு நொடிக்குள்ளாக யானையின்மேல்; மழையின் - மேகம் அதிர்வது போல; மா முரசு எற்றுதிர் - பெரிய போர் முரசங்களை முழக்குங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான்.

உழையர் - குற்றேவல் பணி செய்வோர் வெகுண்ட கரன் படைக்கலங்களையும் தேரையும் கொண்டு வருக, முரசை முழக்குக என்று கட்டளையிட, பக்கத்தில் இருந்தவர் ஓடிச் சென்று யானை மேல் முரசேற்றிப் பறையறைந்து அரக்கச் சேனை வருமாறு கரனது கட்டளையைத் தெரிவித்தனர் என்பது. ஓங்கல் - யானை: உவமவாகுபெயர் முரசு முழக்குக்கு மேக முழக்கு உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Bring my chariot!" "Make ready my fierce weapons of war!"
  2. "Attendants, run, and in an instant, on the elephant's back,
  3. beat the great drum like thunder, quickly!" he said,
  4. roaring so that the fierce lions in their caves were afraid.

What the poem says

Karaṉ roars orders, so loudly that lions cower in their caves. He calls for his chariot and weapons, and tells his servants to beat the great war drums on elephant-back, booming like thunderclouds, to summon the whole rākṣasa army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aḻai eṉ tēr ';'eṉakku ākku vem pōrp paṭai ';
'uḻaiyar ōṭi, oru noṭi ōṅkalmēl
maḻaiyiṉ mā muracu eṟṟutir val;' eṉṟāṉ,
muḻaiyiṉ vāḷ ari añca muḻaṅkuvāṉ.