கம்பராமாயணம் 2981 · ஆரணிய 6.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேரி ஓசை பிறத்தலும் - அவ்வாறு போர்ப் பறை முழங்கிய மாத்திரத்தில், பெட்பு உறு - பெருமை மிக்க; மாரிமேகம் வரம்பு இல - மழைபொழியும் மேகங்கள் அளவில்லாதன; வந்து என - திரண்டு வந்தாற்போல; தேரின் சேனை - தேர்களையுடைய அரக்கச் சேனை; திரண்டது - ஒன்றாகத் திரண்டு வந்து கூடியது; தேவர் தம் ஊரும் - (அதனால்) தேவலோகம்; நாகர் உலகும் - நாகலோகமும், உலைந்த - நிலைகுலைந்து வருந்தின.
தீயோரை நலிந்து தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவதாரம் எடுத்துள்ள இராமபிரானுக்கு இதனால் என்னவாகுமோ என்று தேவர்களும், அளவற்ற சேனைகள் ஒருங்கு கூடியதனாலாகிய பார மிகுதியைத் தாங்க மாட்டாமல் பாதாளவுலகத்து நாக சாதியாரும் வருந்தினர் என்பது.
சேனைகள் படைக்கலங்களைப் பொழிவதையும், பெருமுழக்கம் செய்வதையும், கரு நிறம் மிகுந்து இருப்பதையும் கருதி மாரி மேகத்தை உவமை கூறினார். அஃதாவது தேருக்கு - மேகம் நிறத்தாலும் உயர்ந்து விளங்கும் உருவாலும் ஒலியாலும் உவமை என்பது. ஏ - ஈற்றசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the sound of the drums arose, as if numberless
- great rain clouds had come gathering,
- the army of chariots massed together; the city of the gods
- and the world of the Nāgas trembled.
What the poem says
At the sound of the drums Karaṉ's chariot army gathers like countless dark monsoon clouds, black, towering and thundering.
The gods in heaven tremble, fearing for Irāmaṉ, who has come down to protect them, and the serpent people of the underworld are crushed by the weight of so huge a host.