கம்பராமாயணம் 2982 · ஆரணிய 6.25

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போர்ப் பெரும் படை , பொம்மென் முழக்கமா
நீர்த் தரங்கம் நெடுந்தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது ; இறுதியின் ஆர்கலிக்
கார்க் கரும் கடல் கால் கிளர்ந்து என்ன ஏ .

பொருள் · Meaning in Tamil

போர்ப் பெரும் பணை - போரினைத் தெரிவிக்கும் பெரிய முரசுகளின் ஓசை: பொம் என் முழக்கமா - பொம்மென்று ஒலிக்கின்ற ஆரவாரமாக இருக்க; நீர்த் தரங்கம் ஆ - கடல் நீரிலுள்ள அலைகளாக, நெடுந் தடந் தோள்கள் - நீண்ட பெரிய தோள்கள் இருக்க; இறுதி இல் ஆர் கலி கார்க் கருங்கடல் - முடிவே இல்லாத ஆரவாரத்தையும் மேகம் போன்ற கரு நிறத்தையுமுடைய கடல்; கால் கிளர்ந்து என்ன - ஊழிக் காற்றினால் பொங்கி மேலெழுந்தாற் போல; ஆர்த்து எழுந்தது - (அரக்கர் சேனை) ஆரவாரம் செய்து கொண்டு (போருக்கு) எழுந்தது.

ஊழிக் காலத்தில் கிளர்ந்து பேராரவாரத்துடன் கடல் எழுவது போல அரக்கர் சேனை எழுந்தது என்பது தற்குறிப்பேற்றவணி. பொம்மென - ஒலிக் குறிப்பு. பணை - ஒலி: முதலாகுபெயர். ஏ - ஈற்றசை.

சேனை கடல் என்றதற்கேற்ப அலைகள் தோள்களாகக் கூறப்பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great war drums as its booming roar
  2. and long, broad shoulders as its waves of water,
  3. it rose up shouting, like the endlessly roaring
  4. dark sea, black as cloud, stirred up by the wind at the world's end.

What the poem says

The rākṣasa army rises roaring like the black ocean whipped up by the winds of the cosmic flood at the end of an age.

The image is carried through: the boom of the war drums is the sea's roar, and the warriors' broad shoulders heaving forward are its waves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōrp perum paṇai, pom eṉ muḻakkamā
nīrt taraṅkam neṭun taṭan tōḷkaḷā
ārttu eḻuntatu; iṟutiyil ār kalik
kārk karuṅ kaṭal kāl kiḷarnteṉṉavē.