கம்பராமாயணம் 2983 · ஆரணிய 6.26

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காடு துன்றி விசும்பு கரந்தென
நீடி , எங்கும் நிரந்த நெடும் கொடி ,
'ஓடும் எங்கள் பசி 'என்று உவந்து , எழுந்து ,
ஆடுகின்ற அலகையின் ஆடவே .

பொருள் · Meaning in Tamil

காடு துன்றி - காடுகள் எல்லாம் அடர்ந்து நெருங்கி; விசும்பு கரந்தென - வானத்தை மறைத்தாற் போல; எங்கும் நீடி நிமிர்ந்த - எல்லா இடத்தும் நீண்டு உயர்ந்த; நெடுங் கொடி - தேர்களின் நீண்ட கொடிகள்; எங்கள் பசி ஓடும் என்று - எங்களுடைய பசி விரைவில் நீங்கிவிடும் என்று; உவந்து எழுந்து - மகிழ்ச்சியோடு எழுந்து நின்று; ஆடுகின்ற அலகையின் - கூத்தாடுகின்ற பேய்களைப் போல, ஆட - அசையவும்; 'ஏ' - ஈற்றசை.

தேரின் கொடிகள் அடர்ந்து வானம் மறைய அசைந்து மேலோங்கி நிற்பது அக் காட்டின் மரங்கள் மேலெழுந்து வானத்தையளாவி நின்று மறைத்தல் போலும் என்பது தற்குறிப்பேற்ற வணி.

அலகைகள் பசி ஓடும் என்றது போரில் இறந்தவர் உடலையும் குருதியையும் உண்ண இடமாகும் என்று கருதியதால் ஆகும். கொடிக்குப் பேய் ஒப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if a forest had crowded together and hidden the sky,
  2. the long banners rising tall everywhere
  3. danced like ghouls that rise up rejoicing,
  4. saying, "Our hunger will be gone!"

What the poem says

The chariot banners rise so thick that they hide the sky like a dense forest. Swaying in the wind, they look like ghouls dancing for joy.

The ghouls dance because a battle means plenty of corpses and blood to feast on, and their hunger will soon be gone. The image hints at the slaughter to come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṭu tuṉṟi vicumpu karanteṉa
nīṭi, eṅkum nimirnta neṭuṅ koṭi,
'ōṭum eṅkaḷ paci 'eṉṟu uvantu, eḻuntu,
āṭukiṉṟa alakaiyiṉ āṭavē.