கம்பராமாயணம் 2992 · ஆரணிய 6.35

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம் இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும் பாசமும் .

பொருள் · Meaning in Tamil

குந்தமும் - சிறிய ஈட்டிகளும்; குலிசமும் - வச்சிரம் படைகளும்; கோலும் - தடிகளும்; பாலமும் - பிண்டிபாலமென்னும் முறுக்குத் தடிகளும்; அந்தம் இல் சாபமும் - அளவில்லாத விற்களும்; சரமும் - அம்புகளும்; ஆழியும் - சக்கரப் படைகளும்; வெந் தொழில் வலயமும் - கொடிய தொழிலையுடைய வளையங்களும்; விளங்கு சங்கமும் - வெண்ணிறமாக விளங்கும் சங்குகளும்; பந்தமும் - தீப் பந்தங்களும், கப்பணப் படையும் - கப்பணமென்னும் ஆயுதங்களும்; பாசமும் - கயிறுகளும்; தனது பெருமுழக்கத்தால் பகைவரை அஞ்சச் செய்து அழித்தலால் சங்கும் ஆயுதத்தின் பால் சேரும். திருமாலின் ஐந்து படைகளுள் பாஞ்சசன்னியம் என்ற சங்கும் ஒன்றாதலை அறியலாம். கப்பணம் - இரும்பால் யானை நெருஞ்சிமுள் வடிவில் செய்த கருவி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Short lances and thunderbolts, staves and piṇṭipālas,
  2. bows without number, arrows and discuses,
  3. rings of cruel work and gleaming conches,
  4. torches, caltrop weapons and ropes.

What the poem says

The weapon list continues: lances, thunderbolt weapons, clubs, twisted staves, countless bows and arrows, discuses, bladed rings, conches, torches, iron caltrops and ropes.

The conch counts as a weapon because its blast terrifies the enemy; Tirumāl's own conch is one of his five weapons. The kappaṇam is an iron weapon shaped like a thorny caltrop, used against elephants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuntamum kulicamum kālum pālamum
antam il cāpamum caramum āḻiyum
ven toḻil valayamum viḷaṅku caṅkamum
pantamum kappaṇap paṭaiyum pācamum.