கம்பராமாயணம் 2993 · ஆரணிய 6.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆதியின் - (மழு முதலாகப் பாசம் ஈறாக முன் சொன்னவை) முதலாகவுள்ள; அருக்கனும் அனலும் - சூரியனும் அக்கினியும், அஞ்சுறும் சோதிய - அஞ்சத்தக்க ஒளியுடையனவும்; சோரியும் தூவும் துன்னிய - (பகைவரின் இரத்தமும் மாமிசமும் நிறைந்து பொருந்தினவையும்; இமையவர்க்கு எலாம் - தேவர்களுக்கெல்லாம்; வேதனை கொடுத்தன - (முன்னைய போர்களில்) துன்பந் தந்தவையும்; வாகை வேய்ந்தன - (வெற்றிக்கு அடையாளமான வாகைப் பூமாலை சூடியவையுமாகிய; ஏதிகள் மிடைந்தன - ஆயுதங்கள் நெருங்கி விளங்கின.
தூ - தசை. வாகை - இருமடியாகுபெயர் சோரியும் தூவும் துன்னியது - முன்பு தேவர்களுடன் செய்த போர்களில் தாக்கிப் பகைவரின் இரத்தத்தையும், அவரது உடலின் மாமிசத்தையும் கொண்டமை. ஆதியின் - ஏதிகள் என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- These and other weapons, with a glare that even the sun and fire would fear,
- clotted with blood and flesh,
- crowded thick; weapons that had brought pain to all the gods
- and been crowned with the garland of victory.
What the poem says
The weapons listed in the previous verses throng the army. They blaze so brightly that the sun and fire god would be afraid of them.
They are still clotted with the blood and flesh of enemies, the gods themselves among them, whom they defeated in earlier wars. They have been garlanded with the vākai flower, the sign of victory.