கம்பராமாயணம் 2996 · ஆரணிய 6.39

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரத்தினர் - மிக்க வலிமை வாய்ந்தவர்கள்; உரும் என உரறும் வாயினர் - இடி போல முழங்கும் பேச்சினையுடையவர்கள்; கரத்து எறி படையினர் - கைகளால் வீசியெறியும் ஆயுதங்களையுடையவர்கள்; கமலத்தோன் தரும் வரத்தினர் - தாமரைப் பூவில் தோன்றிய பிரமன் தந்த வரங்களைப் பெற்றவர்கள்; மலை என, மழை துயின்று எழு சிரத்தினர் - மலைகளென்று எண்ணி மேகங்கள் நீண்ட பொழுது தங்கிப் பின்பு எழுந்து சென்ற தலையையுடையவர்கள்; தருக்கினர் - கருவம் மிக்கவர்கள்; செருக்கும் சிந்தையார் - போரில் பகைவரையழிக்கும் எண்ணங் கொண்டவர்கள்.

மலையென மழைதுயின்றெழு சிரத்தினர் - மயக்க வணி உரறுதல் - முழக்குதல். கரத்து - உருபுமயக்கம்.

அரக்கரின் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக அரக்கர் பலரும் தவத்தால் வரம் பெற்றவர்கள் என்ற குறிப்பினைக் 'கமலத் தோன் தரும் வரத்தினர்' என்ற தொடரால் புலப்படுத்துகிறார். செருத்தல் - அழித்தல். செருக்குதல் - எழுச்சியுறுதல்; உற்சாகம் என்றும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mighty, with mouths that roared like thunder,
  2. with weapons hurled from their hands, holding boons
  3. granted by the lotus-born one, with heads on which clouds slept
  4. and rose, taking them for mountains; arrogant, minds eager for battle.

What the poem says

The rākṣasa warriors are mighty, roar like thunder, and carry throwing weapons. Like most of their race they hold boons won from Piramaṉ, the god born on a lotus, through penance.

They are so tall that clouds settle on their heads to sleep, mistaking them for mountain peaks, and so proud that they long for battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urattiṉar, urum eṉa uraṟum vāyiṉar,
karattu eṟi paṭaiyiṉar, kamalattōṉ tarum
varattiṉar, malai eṉa maḻai tuyiṉṟu eḻu
cirattiṉar, tarukkiṉar, cerukkum cintaiyār.