கம்பராமாயணம் 2997 · ஆரணிய 6.40

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் ,
கண் அளவிடல் அரு மார்பர் , காலினால்
மண் அளவிடும் நெடுவலத்தர் , வானிடை
எண் அளவிடல் அரும் செரு வென்று ஏறினார் .

பொருள் · Meaning in Tamil

விண் அளவிட - ஆகாயத்தை அளந்து பார்க்கும்படி; நிமிர்ந்து உயர்ந்த மேனியர் - மிக ஓங்கி வளர்ந்த உடம்பையுடையவர்கள்; கண் அளவிடல் அரு மார்பர் - கண்களால் பார்த்து அளவிட்டுக் கூறமுடியாத விரிந்த மார்பையுடையவர்கள்; காலினால் மண் அளவிடு - (தங்கள் கால்களால் பூமியை அளந்து பார்க்கக் கூடிய; நெடு வலத்தர் - மிகுந்த வலிமையுடையவர்கள்; வானவர் - தேவர்களோடு நிகழ்ந்த; எண் அளவிடல் அருஞ்செரு - எண்ணால் கணக்கிட்டுச் சொல்ல முடியாத போர்களில்; வென்று ஏறினார் - போர்களில் (அவர்களை வெற்றி கண்டு மேம்பட்டவர்கள்.

எண் அளவிட - மனத்திலே கொண்டு மதிக்கும்படி. செருவரும் - (இப்பொழுது) பெரும் போர் நேரும் என்று ஏறினார் - என்று எண்ணி வீராவேசம் மிகப் பெற்றவர்கள் என்றும் உரை காணலாம். வலம் - பலம், வலிமை, வெற்றி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With bodies risen tall as if to measure the sky,
  2. chests too broad for the eye to measure, of great strength
  3. that could measure out the earth with their feet, they had risen high
  4. by winning wars against the gods past all counting.

What the poem says

The warriors are so tall they seem to measure the sky, their chests are too broad for the eye to take in, and with their strides they could pace out the whole earth.

They have won more wars against the gods than anyone could count. The verse repeats the word 'measure' in each line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ aḷaviṭa nimirntu uyarnta mēṉiyar,
kaṇ aḷaviṭal aru mārpar, kāliṉāl
maṇ aḷaviṭu neṭu valattar, vāṉavar
eṇ aḷaviṭal aruñ ceru veṉṟu ēṟiṉār.