கம்பராமாயணம் 3048 · ஆரணிய 6.91

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானத்தன , கடலின் புற வலயத்தன , மதி சூழ்
மீனத்தன , மிளிர் குண்டல மிதுனத்தன , மிடல் வெம்
கானத்தன , மலையத்தன , திசை சுற்றிய கரியின்
தானத்தன , காகுத்தன சரம் உந்திய சிரமே .

பொருள் · Meaning in Tamil

மிளிர் குண்டல வதனத்தன - விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியைக் கொண்ட முகத்தையுடையனவும்; காகுத்தன் சரம் உந்திய சிரம் - இராமபிரானின் அம்புகளால் அறுத்துத் தள்ளப் பட்டனவுமாகிய தலைகள்; வானத்தன - மேக மண்டலத்தில் சென்று சேர்ந்தவையும்; கடலின் புற வலயத்தன - கடலின் வெளிவட்டத்திற் சென்று சேர்ந்தவையும்; மதி சூழ் மீனத்தன - சந்திரனைச் சூழ்ந்த நட்சத்திரமண்டலங்களிற் சென்று சேர்ந்தவையும்; மிடல் வெம் கானத்தன - வலிய கொடிய காடுகளில் சென்று சேர்ந்தவையும்; மலையத்தன - மலைகளிற் சென்று சேர்ந்தவையும்; திசை சுற்றிய கரியின் - திசைகளைச் சுற்றிலுமுள்ள (எட்டுத் திக்கு) யானைகளிடத்தில்; தானத்தன - சென்று சேர்ந்தவையுமாயின. ஏ - ஈற்றசை.

அறுபட்ட தலைகள் எப்புறத்தும் நெடுந் தூரத்திற்கு அப்பால் சென்று விழுந்தன என்பது மீன் - விண்மீன்; வானத்தன, வலயத்தன - அ - ஆறனுருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some were in the sky, some beyond the ring of the ocean, some among the stars
  2. that surround the moon, faces with gleaming earrings; some in the mighty, fierce
  3. forests, some on the mountains, some at the stations of the elephants
  4. that guard the quarters: the heads that Kākuttaṉ's arrows sent flying.

What the poem says

The heads that Irāmaṉ's arrows strike off, still wearing their glittering earrings, fly in every direction: up into the clouds, beyond the ocean's rim, among the stars around the moon, into the wild forests and mountains, and as far as the elephants that hold up the eight quarters of the world.

Kākuttaṉ, descendant of Kakutstha, is a name for Irāmaṉ from an ancestor of his solar line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉattaṉa, kaṭaliṉ puṟa valayattaṉa, mati cūḻ
mīṉattaṉa, miḷir kuṇṭala vataṉattaṉa, miṭal veṅ
kāṉattaṉa, malaiyattaṉa, ticai cuṟṟiya kariyiṉ
tāṉattaṉa, kākuttaṉ caram untiya ciramē.