கம்பராமாயணம் 3049 · ஆரணிய 6.92

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண் மேலன , மலை மேலன , மழை மேலன , மதி தோய்
விண் மேலன , நெடு வேலையின் மேல் கீழன , மிடலோர்
புண் மேலன , குருதிப் பொரு திரை யாறுகள் பொங்கத்
திண் மேருவை நகும் மார்பினை உருவித் திரி சரமே .

பொருள் · Meaning in Tamil

புண் மேலன குருதி - புண்பட்ட உடல்களிலிருந்து பெருகும் இரத்த வெள்ளமாகிய; பொரு திரை ஆறுகள் பொங்க - மோதுகின்ற அலைகளையுடைய நதிகள் மிகும்படியாக; மிடலோர் - வலிமையுள்ள அரக்கர்களின்; திண் மேருவை நகு மார்பினை - வலிய மேருமலையையும் (தமது வலிமைக்கு ஈடாகாதென்று) இகழ்கின்ற மார்புகளை; உருவித் திரி சரம் - முழுவதும் துளைத்து அப்பாலே சென்ற இராமனுடைய அம்புகள்; மண் மேலன - தரையில் விழுந்தவையும்; மலை மேலன - மலைகளின் மேல் விழுந்தவையும்; மழை மேலன - மேகங்களின் மேற்பட்டவையும்; மதி தோய் விண் மேலன - சந்திரன் பொருந்தி விளங்கும் ஆகாயத்தின் மேல் சென்றவையும்; நெடு வேலையின் மேல் கீழன - பெரிய கடல்களின் மேலேயும் கீழேயும் உள்ளவையுமாயின; ஏ - ஈற்றசை

இரத்த நதிகள் பெருகுமாறு அரக்கர்களின் மார்புகளை ஊடுருவிச் சென்ற இராம பாணங்கள் மண்மேலன, மலை மேலன, மழை மேலன, விண் மேலன, வேலையின் மேல் கீழனவாக அமைந்தன என்பது.

இச் செய்யுள் இராமனின் அம்புகள் பகைவர் தம் உடல்களை ஊடுருவிச் சென்ற வேகத்தின் மிகுதியை விளக்கும். அரக்கர்கள் மார்புகளுக்கு மேருமலை ஒப்பு - அதன் திண்மையும் பெருமையும் பற்றி. அரக்கர் மார்பு பொழியும் குருதிக்கு மலையருவி நிகர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the earth, on the mountains, on the clouds, in the sky
  2. where the moon dwells, above and below the long ocean,
  3. went the arrows that pierced through the chests of the mighty, chests that mocked solid Mēru,
  4. as rivers of blood from the wounds of the strong surged with clashing waves.

What the poem says

Irāmaṉ's arrows go straight through the rākṣasas' chests, which were so broad and hard they made Mount Mēru look puny, and fly on to land everywhere: on the ground, on the mountains, among the clouds, in the moonlit sky, and above and beneath the ocean.

Meanwhile the blood from the wounds swells into rivers with crashing waves, like waterfalls pouring from a mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇ mēlaṉa, malai mēlaṉa, maḻai mēlaṉa, mati tōy
viṇ mēlaṉa, neṭu vēlaiyiṉ mēl kīḻaṉa, miṭalōr
puṇ mēlaṉa, kurutip poru tirai āṟukaḷ poṅka
tiṇ mēruvai naku mārpiṉai uruvit tiri caramē.