கம்பராமாயணம் 3050 · ஆரணிய 6.93

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொலம் தாரினர் அனலின் சிகை பொதி கண்ணினர் எவரும் ,
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் , சர மழையால்
உலந்தார் ; உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் ;
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோரொடும் ஆர்த்தார் .

பொருள் · Meaning in Tamil

பொலம் தாரினர் - அழகிய மாலையணிந்தவர்களும்; அனலின் சிகை பொழி கண்ணினர் - நெருப்பின் சுடர்களைச் சிந்துகின்ற கண்களையுடையவர்களும்; வலம் தாங்கிய - வலிமை கொண்ட, வடி வெம் படை விடுவார் எவரும் - கூரிய கொடிய போர்க் கருவிகளை இராமன் மேல் விடுபவர்களான அரக்கர்கள் யாவரும்; சர மழையால் உலந்தார் - (இராமன் எய்த) அம்பு மழையால் இறந்தனர்; உடல் கடலோடு உற - அவ்வாறு இறந்தோர் தம் உடல்கள் கடலோடு போய்ச் சேர; உலவா உடல் உற்றார் - (பின் அழியாத தேவ உடலைப் பெற்றார்கள்; இமையோர் - (அதனால்) தேவர்கள்; நிசிசரர் அலந்தார் ஆம் என ஆர்த்தார் - அரக்கர்கள் அழிந்தார்களென்று மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்.

நிசிசரர் - அரக்கர் : இரவில் சஞ்சரிப்பவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All those with golden garlands and eyes pouring out flames of fire,
  2. who loosed sharp, fierce, mighty weapons, under the rain of arrows
  3. perished; as their bodies went to the sea, they gained bodies that never die;
  4. "The night-walkers are destroyed!" the gods cried out and shouted for joy.

What the poem says

Every garlanded, fire-eyed rākṣasa who attacked Irāmaṉ dies under his rain of arrows. Their bodies are swept down to the sea, while they themselves gain undying heavenly bodies, as warriors slain in battle do.

The gods shout with joy that the night-walkers, the rākṣasas who prowl by night, have been destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1polan tāriṉar aṉaliṉ cikai poḻi kaṇṇiṉ evarum,
valam tāṅkiya vaṭi vem paṭai viṭuvār, cara maḻaiyāl
ulantār; uṭal kaṭalōṭu uṟa ulavā uṭal uṟṟār;
alantār nicicarar ām eṉa imaiyōr eṭuttu ārttār.