கம்பராமாயணம் 3052 · ஆரணிய 6.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொலை வாய் மழைத் தாரைகள் பட - (பகைவரைக்) கொல்லும் தன்மையுடைய கூரிய நுனியுள்ள (இராமனுடைய) அம்புகளாகிய மழைத் தாரைகள் மேல் விழுவதனால்; சிலர் அழைத்தார் - (அரக்கர்களில்) சில பேர் துன்பம் பொறுக்க மாட்டாமல் ஐயா அப்பா என்று) கூவியழைத்தார்கள்; சிலர் அயர்த்தார் - சிலர் சோர்ந்து தளர்ந்தார்கள்; சிலர் அழிந்தார் - சிலர் இறந்தொழிந்தார்கள்; (சிலர்) கழிந்தார் - சிலர் நெடுந்தொலைவு விலகிச் சென்றார்கள்; சிலர் உழைத்தார் - சிலர் மிக வருந்தினார்கள்; சிலர் உயிர்த்தார் - சிலர் பெருமூச்சு விட்டனர்; சிலர் உருண்டார் - சிலர் (தரையிலே) உருண்டார்கள்; (சிலர்) புரண்டார் - சிலர் (தரையிலே) புரண்டு தத்தளித்தனர்; சிலர் குழை தாழ் - சிலர் சேறு ஆழ்ந்து; திரைக் குருதிக் கடல் குளித்தார் - அலைகளோடு கூடிய இரத்தக் கடலில் மூழ்கினார்கள்; சிலர் பார் இடை மடிந்தார் - சிலர் தரையிலே விழுந்து இறந்தார்கள்; (சிலர்) உடைந்தார் - சிலர் உறுதிநிலை கெட்டு ஓடினார்கள்.
அரக்க வீரர் பலரும் இராமனுடைய அம்புகளால் பலபடி, ஆயினமையை இச் செய்யுள் புலப்படுத்தும். 'கொலைவாய்' என்ற அடைமொழியால் 'மழை' அம்புமழையாயிற்று. முன் செய்யுளில் குருதிக் குளமாகவிருந்தது இச் செய்யுளில் குருதிக் கடலாகப் பொங்கியது என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some cried out, some grew faint, some perished, some fled far,
- some struggled, some gasped, some rolled, some writhed,
- some sank into the sea of blood with its waves over deep mire;
- as the deadly rain fell, some died on the ground, some broke and ran.
What the poem says
Under Irāmaṉ's killing rain of arrows the rākṣasas meet every kind of end. Some cry out for help, some faint, some die, some run far away, some struggle, some gasp for breath, some roll and writhe on the ground.
Others sink into the sea of blood, which has now grown from pools into an ocean, some fall dead, and some break ranks and flee.