கம்பராமாயணம் 3057 · ஆரணிய 6.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மால் பொத்தின - மயக்கம் நிறைந்த; மறவோர் உடல் - கொடிய அரக்கர்களின் உடம்பில்; மழை பொத்தின - அம்பு மழை துளைத்தன; வழி செம்பால் பொத்தின - வழிகின்ற இரத்தப் பெருக்கு நிறைந்ததுவாய், நதியின் கிளர்படி பொத்தின - ஆறுகள் போல விளங்கும் பூமியை மறைத்தது; படர் வான் மேல் பொத்தின - பரந்த வானத்தின் மேல் நிறைந்த, குழு விண்ணவர் - கூட்டமாகவுள்ள தேவர்கள்; விழி பொத்தினர் - (போரின் உக்கிரத்தைக் காண விரும்பாமல்) கண்களை மூடிக் கொண்டார்கள்; நமன் தூதுவர் - யமதூதர்கள்; விரை வெங்கால் பொத்தினர் - விரைவாக வீசும் கொடிய காற்றையொத்தவர்களாய்; கடிது உற்று - விரைவாக வந்து; உயிர் கவர்வார் - அரக்கருயிரைப் பறிப்பவர்களாயினர்.
வீரர்களை மலைகளுக்கு உவமித்ததற்கேற்ப, அவர்களின் உடல்களிலிருந்து பெருகியோடும் இரத்த வெள்ளத்தை நதிகளாகக் கூறினார்.
நமன் தூதுவர் தூது பொருந்தியது - அவர்களின் மிகுதியையும், அவர்களின் கால்களால் அந்தப் போர்க்களம் மூடுண்டதையும் அரக்கர்களின் அழிவு மிகுதியையும் அறிவிப்பது.
பொத்துதல் - நிறைதல், மறைதல், மூடுதல் மழை - மழை போல் சொரிந்த அம்புத் தொகுதி : உவமையாகுபெயர் செம்பால் - இரத்தம்.
'விரை வெங்கால் பொத்தினர் கடிதுற்று' - 'விரைந்து செல்லும் தன்மையுள்ள கொடிய தம் கால்களை அடித்துக் கொண்டு விரைந்து வந்து' எனப் பொருள் உரைப்பினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rain of arrows pierced the bodies of the frenzied warriors; the red stream
- that flowed covered the ground in surging rivers; the throng of gods
- crowding the wide sky above covered their eyes; Yamaṉ's messengers,
- swift as fierce wind, came quickly and took their lives.
What the poem says
Irāmaṉ's arrows riddle the bodies of the frenzied warriors, and their blood covers the ground in rivers.
The gods, crowding the sky to watch, cover their eyes at the horror. Yamaṉ's messengers rush in like a fierce wind to carry off the souls. The verse builds on one verb, 'covered' or 'filled', used in each clause in a different sense.