கம்பராமாயணம் 3058 · ஆரணிய 6.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேய் ஏறின - பேய்கள் கூட்டமாக வருவதற்குக் காரணமான, செரு வேட்டு - போரை விரும்பி; எழு பித்து ஏறினர் - எழுகின்ற பைத்தியம் பிடித்த அரக்கர்களின்; பில வாய் - மலைக் குகை போல (ஆழ்ந்து அகன்ற) வாய்களின் மேல்; நாய் ஏறின - பல நாய்கள் ஏறின; தலை மேல் நெடுநரி ஏறின - தலைகளின் மேல் பெரிய நரிகள் வந்து ஏறின; தீ ஏறு (என) - பெரிய நெருப்புப் போலவும்; இகல் அரி ஏறு என - வலிய ஆண் சிங்கம் போலவும்; முகில் ஏறு என - மேகத்திலே தோன்றும் பேரிடி போலவும்; வந்தார் செறிந்தார் - வந்து நெருங்கிய அரக்கர்கள்; எரி கால் வாய் - நெருப்பையுமிழும் நுனியிலே; ஏறின வடி வாளியின் - கூரிய (இராமனுடைய) அம்புகளால்; வான் ஏறினர் - (போரில் மடிந்து) வீரசொர்க்கத்திற்கு ஏறிச் சென்றார்கள்.
பேயேறின செரு - பேய்கள் பிணங்களைத் தின்ன விரும்பி மிகுதியாக வருமாறு பிராணிகளுக்கு அழிவையுண்டாக்கும் போர் பித்து - வரம்பு கடந்த ஆசை நாயும் நரியும் இறந்தவுடல்களைப் பிடுங்கித் தின்ன வந்தவையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the cavernous mouths of those mad with lust for a war that draws the ghouls
- dogs climbed; on their heads tall jackals climbed; by the sharp arrows
- with fire-spitting tips they climbed to heaven: those who came and pressed in
- like great fire, like the fierce lion, like the thunderbolt of the clouds.
What the poem says
The rākṣasas came on like blazing fire, like fierce lions, like thunder, crazed with the desire for a battle that would bring the ghouls flocking.
Now Irāmaṉ's fiery arrows send them up to heaven, while dogs climb over their gaping cave-like mouths and jackals sit on their heads to feed. The verse repeats the verb 'climbed' throughout.