கம்பராமாயணம் 3059 · ஆரணிய 6.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தலை சிந்தின - (அரக்கர்களின்) தலைகள் சிதறின; தழல் சிந்தின விழி சிந்தின - நெருப்புப் பொறிகளையுமிழ்ந்த (அவர்களின் கண்கள் சிதறின; வரி சிந்துரம் - (இருக்கை வரிந்து) கட்டப்பட்ட யானைகள்; தரை மேல் மலை சிந்தினபடி சிந்தின - பூமியின் மேலே மலைகள் சிதறிவிழுந்தாற் போலச் சிதறின; சிந்தின மழை போல் சிலை சிந்தின கணை - பெய்த மேகம் போல (இராமனது) வில் உமிழ்ந்த அம்புகள்; திசை சிந்தின - எல்லாத் திசைகளிலும் சிதறி விழுந்தன; திசையூடு உலை சிந்தின - அந்தத் திக்குகளிலெல்லாம் உலைக் களத்திலிருந்து சிதறிய; பொறி சிந்தின உடலம் - தீப் பொறி போன்ற நெருப்புப் பொறிகளைச் சிதறிய (அரக்கரின் உடம்புகள்; உயிர் சிந்தின - உயிர்கள் நீங்கின.
விழி சிந்தின - கண்கள் சிதறின; தழல் சிந்தின - (அந்தக் கண்கள் கொடுமையால் மேலும்) தீயுமிழ்ந்தன என்றும், உயிர் சிந்தின உடலம் - உயிர் நீங்கிய உடம்புகள்; உலை சிந்தின பொறி சிந்தின - (கொடுமையால் பின்பும்) உலை சிந்தின அனற் பொறிகளைச் சிதறின எனவும் பொருள் உரைக்கலாம். மழை போல் சிலை கணை சிந்தின - மேகம் போல வில் அம்புகளைச் சொரிந்தன; சிந்தின திசை (அந்த அம்புகள்) சிதறி விழுந்த திக்குகள்; சிந்தின - அந்த அம்புகளின் வேகத்தால், இடிந்து விழுந்தன; திசையூடு உலை சிந்தின - பொறி சிந்தின அத்திக்குகளிலெல்லாம் உலைக் களத்துப் பொறிகள் போன்ற தீப்பொறிகள் சிதறின என்றும் உரைக்கலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Heads were scattered, eyes were scattered, fire was scattered; on the ground
- the girthed elephants were scattered as if mountains had been scattered; like rain
- the bow scattered arrows, scattered to every quarter; and through the quarters
- bodies that scattered sparks like a forge scattered their lives.
What the poem says
The verse turns on one verb, 'scattered', repeated in every phrase. Heads fly, eyes that spat fire burst, harnessed elephants crash down like mountains, and Irāmaṉ's bow sprays arrows like rain in every direction.
Across the field, rākṣasa bodies that threw off sparks like a blacksmith's forge give up their lives. The commentary shows how the same words can be read in several ways, for example that the arrows' force made the horizons themselves crumble.