கம்பராமாயணம் 3060 · ஆரணிய 6.103

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படைப் பெருந்தலைவரும் படைத்த தேர்களும்
உடைத் தடம் படைகளும் ஒழிய , உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்த்தவர் , வீரன் வாளியால்
முடைத் தடங் குருதியின் கடலின் மூழ்கினார் .

பொருள் · Meaning in Tamil

படைப் பெருந் தலைவரும் - பெரிய சேனைத் தலைவர் பதினால்வரும்; படைத்த தேர்களும் - (அவர்கள்) பெற்றிருந்த இரதங்களும்; உடைத் தடம் படைகளும் - அவர்கள் தாங்கிய பெரிய போர்க் கருவிகளும்; ஒழிய - நீங்கலாக; எதிர் உற்று - (இராமபிரானுக்கு) எதிரில் வந்து; விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் - கோபங் கொண்டு நெருங்கித் தாக்கியெதிர்த்த அரக்கர்கள் எல்லோரும்; வீரன் வாளியால் - இராமனுடைய அம்புகளால்; முடைத்த - துர்நாற்றம் மிகுந்த; வெங்குருதியின் கடலில் - கொடிய இரத்தக் கடலிலே; மூழ்கினார் - முழுகி இறந்தார்கள்.

இராமனை எதிர்த்த அரக்கர்களுள் சேனைத் தலைவர் பதினால்வர் தவிர மற்றவர் யாவரும் அழிந்தமையை இதில் கூறினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Except the great commanders of the army, the chariots they had
  2. and the mighty weapons they held, all who came
  3. and pressed on in anger to face him were drowned, by the hero's arrows,
  4. in the stinking sea of hot blood.

What the poem says

Apart from the fourteen commanders, their chariots and their weapons, every rākṣasa who charged at Irāmaṉ in anger has now been drowned by his arrows in the stinking sea of blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭaip perun talaivarum paṭaitta tērkaḷum
uṭait taṭam paṭaikaḷum oḻiya, uṟṟu etir
viṭaittu aṭarntu etirntavar, vīraṉ vāḷiyāl
muṭaitta veṅ kurutiyiṉ kaṭalil mūḻkiṉār.