கம்பராமாயணம் 3061 · ஆரணிய 6.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(படைத் தலைவர் பதினால்வரும்) சுற்றுற நோக்கினர் - (தம்மைச் சுற்றிலும் எல்லாப் பக்கங்களிலும் பார்த்து; தொடர்ந்த சேனையில் - தம்மைத் தொடர்ந்து வந்த சேனைகளில்; தலை அற்றில எனும் ஆக்கை - தலை அறாதவையென்று சொல்லக் கூடிய அரக்கரின் உடம்புகளை; கண்டிலர் - (ஒன்றேனும்) காணாதவராகி, எயிறுகள் தெற்றினர் - பற்களைக் கடித்துக் கொண்டனர்; சினம் திருகினார் - கோபம் மூண்டு; முடுகு தேரினார் - விரைந்து செல்லும் தேர்களையுடையவர்களாய்; இராமனை முற்றினர் - இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர்
சேனையிலிருந்த குதிரைகள், யானைகள் உட்பட யாவும் தலையறு பட்டமை விளங்கும். சினம் திருகுதல் - கோபத்தால் முறுக்கேறுதல். பற்களைக் கடித்தல் கோபத்தால் உண்டாகும் மெய்ப்பாடுகளுள் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They looked all around, and in the army that had followed them
- they saw not one body with its head still on;
- they ground their teeth, their anger twisted tight,
- and in their speeding chariots they closed in on Irāmaṉ.
What the poem says
The fourteen commanders look around and cannot find a single body in their whole army, man or beast, that still has its head.
Grinding their teeth, a sign of fury, they drive their swift chariots at Irāmaṉ and surround him.