கம்பராமாயணம் 3064 · ஆரணிய 6.107

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நூறிய சரம் எலாம் - அழிக்கும் இயல்புடைய (அந்த அரக்கர்களின்) அம்புகளையெல்லாம்; நுறுங்க - பொடியாகும்படி; வாளியால் - (இராமன்) தன் பாணங்களால்; ஈறு செய்து - அழித்து; அவர் சிலை ஏழொடு ஏழையும் - அவர்களின் விற்கள் பதினான்கையும்; ஆறினொடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் - பதினான்கு அம்புகளால்; கூறு செய்து - துண்டுகளாக்கி; அமர்த் தொழிற் கொதிப்பை நீக்கினான் - போர்ச் செயலில் அவர்களின் உக்கிரத்தைப் போக்கினான்.

இராமன் பதினான்கு அரக்கர் தொடுத்து விடுத்த அம்புகளையெல்லாம் தன் அம்புகளால் அழித்துப் பதினான்கு அம்புகளால் அந்த வீரர்களின் விற்களைத் துண்டிக்கவே அன்னாரின் போரின் உக்கிரம் (வேகம்) குறைந்தது என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Ending with his arrows all the destroying shafts so they were smashed to dust,
  2. their bows, seven and seven,
  3. he cut apart with six and six and two arrows,
  4. and quenched their burning zeal for battle.

What the poem says

Irāmaṉ shatters every arrow the fourteen commanders shoot. Then with exactly fourteen arrows, one apiece, he cuts their fourteen bows in two, and their fury in battle is checked.

The poet counts the numbers out playfully: seven and seven bows, six and six and two arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟiya caram elām nuṟuṅka vāḷiyāl
īṟuceytu, avar cilai ēḻoṭu ēḻaiyum,
āṟiṉōṭu āṟum ōr iraṇṭum ampiṉāl
kūṟuceytu, amart toḻiṟ kotippai nīkkiṉāṉ.