கம்பராமாயணம் 3065 · ஆரணிய 6.108

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனைவரும் - அந்தப் படைத் தலைவர் எல்லோரும்; வில் இழந்து - (தம்) விற்களையிழந்ததனால்; வெகுளி மீக்கொள - கோபம் மேலிட; கல் உயர் நெடுவரை - கல்லால் உயர்ந்த பெரிய மலைகளை; கடிதின் ஏந்தினார் - விரைவில் (கையிலே) எடுத்துக் கொண்டு; ஒல்லையில் உருத்து - விரைவாக எழுந்து சீறி; உயர் விசும்பில் ஓங்கி நின்று - ஓங்கிய ஆகாயத்தில் உயர நின்று கொண்டு; எல் உயர் பொறி உக - கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத தீப் பொறிகள் சிந்த; எறிதல் மேயினார் - (அந்த மலைகளை) இராமன் மேல் வீசியெறிந்தார்கள்.

தம்முடைய விற்கள் துண்டிக்கப்படவே அந்த அரக்க வீரர் மலைகளையேந்தி வானத்தில் ஓங்கி நின்று எறியத் தொடங்கினர் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having lost their bows, all of them, as rage overcame them,
  2. quickly lifted up tall mountains of towering rock,
  3. swiftly rose in fury and stood high in the lofty sky,
  4. and began to hurl them, as sparks bright as sunlight flew.

What the poem says

Their bows gone, the fourteen commanders are beside themselves with rage. They tear up huge rocky mountains, spring high into the sky, and start hurling them down at Irāmaṉ, with sparks as bright as sunlight flying off them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil iḻantu, aṉaivarum vekuḷi mīkkoḷa
kal uyar neṭu varai kaṭitiṉ ēntiṉār,
ollaiyil uruttu, uyar vicumpil ōṅki niṉṟu,
el uyar poṟi uka, eṟital mēyiṉār.