கம்பராமாயணம் 3067 · ஆரணிய 6.110

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படைத் தலைத் தலைவர்கள் படலும் - சேனையிடத்து முதன்மை பெற்ற தலைவர்கள் பதினான்கு பேரும் இவ்வாறு இறந்த அளவிலே; அரக்கர்கள் - மற்றுமுள்ள இராக்கதர்கள்; பல் படை புடைத்து - தம்முடைய பல வகை ஆயுதங்களையும் வீசிக் கொண்டு; அடர்ந்து - நெருங்கி; அழல் புரையும் கண்ணினார் - நெருப்பைப் போன்ற கண்களையுடையவர்களாய்; எதிர் கிடைத்தனர் - இராமன் எதிரில் நெருங்கி; கீழும் மேலும் மொய்த்து - நிலத்திலும் ஆகாயத்திலுமாக மொய்த்துக் கொண்டு; திசைகளை அடைத்தனர் - திக்குகளை மறைத்தார்கள் (அதனைக் கண்டு); அமரர் அஞ்சினார் - தேவர்கள் அச்சங் கொண்டார்கள்.

பதினான்கு படைத் தலைவரும் இறந்திடவே வேறு அரக்கர்கள் சினத்தோடு ஆயுதங்களை வீசிக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் திரண்டு நெருங்கவே, தேவர்கள் அஞ்சினர் என்பது - படைத்தலை - 'தலை' ஏழனுருபு.

படைத் தலைவர்களோடு வந்த வீரர்கள் யாவரும் அழிந்தனர் என்று முன் (3978) கூறினமையால் இங்கு வந்தவர் வேறு என்பதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the chief commanders of the army fell, brandishing many weapons,
  2. pressing close, with eyes like fire,
  3. the demons came up against him and, swarming below and above,
  4. blocked up every direction; the gods were afraid.

What the poem says

With the fourteen commanders dead, fresh demons rush in, whirling their weapons, eyes blazing. They crowd the ground and the sky until every direction is shut off, and the watching gods are frightened.

These are new troops: the poet has already said that all the warriors who came with the commanders were destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭait talait talaivarkaḷ paṭalum, pal paṭai
puṭaittu, aṭarntu, etir aḻal puraiyum kaṇṇiṉār,
kiṭaittaṉar, arakkarkaḷ, kīḻum mēlum moyttu
aṭaittaṉar ticaikaḷai, amarar añciṉār.