கம்பராமாயணம் 3069 · ஆரணிய 6.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிருதர் வீச - அரக்கர்கள் வீசியெறிவதால்; வெம்படை - கொடிய அப் படைக் கருவிகள்; விண்ணிடை மிடைந்த - வானத்தில் நெருங்கின; வீரன் அம்பு இடை அறுக்க - இராமபிரானின் அம்புகள் இடையே புகுந்து அறுத்ததால்; அற்றன - துணிபட்டனவாய்; சிந்திப் படும் - சிதறி (நம்மேல் ஊறு ஏற்பட) விழக்கூடும்; என்று - என்று எண்ணி; அஞ்சி - அஞ்சினவர்களாய்; உம்பரும் இரியல் போனார் - தேவர்களும் ஓடிப் போனார்கள்; உலகு எலாம் - மற்ற உலகங்கள் எல்லாம்; உலைந்து சாய்ந்த - நிலைகெட்டு நடுங்கத் தளர்ந்தன; கம்பம் இல் - நிலைபெயராத; திசையில் நின்ற களிறும் - திசைகளைச் சுமந்து நின்ற திக்கு யானைகளும்; கண் இமைத்த - (அச்சத்தால்) கண்களை மூடிக் கொண்டன.
அன்று ஏ - அசைகள். அரக்கர் எறிந்த படைக்கலன்களை இராமபிரானின் அம்பு இடையே அறுத்ததால் அறுபட்ட அந்த ஆயுதங்கள் நம்மேல் படக்கூடுமென்று அஞ்சித் தேவர்களும் நிலைகெட்டோட, உலகமெல்லாம் நடுங்கித் தளர, திக்கு யானைகளும் அச்சத்தால் கண்ணிமைத்தன என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the demons hurled them, the cruel weapons crowded the sky; thinking, 'The hero's
- arrows cut them in mid-air, and the severed pieces will scatter and fall on us,' in fear
- even the gods fled in disorder; all the worlds shook and sagged;
- even the elephants that stand unshaken at the quarters blinked their eyes.
What the poem says
The demons fill the sky with hurled weapons, and Irāmaṉ's arrows cut them to pieces in flight. The gods watching from above fear the falling fragments will strike them and run; the worlds tremble.
Even the elephants that hold up the eight directions, which never move, shut their eyes in fear. The poet deliberately magnifies the battle until it shakes the whole cosmos.