கம்பராமாயணம் 3070 · ஆரணிய 6.113

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத்தலைத் தானையின் , அளவு இல் ஆற்றலன் ,
முத்தலைக் குரிசில் , பொன் முடியன் , முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் ,
வைத் தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் .

பொருள் · Meaning in Tamil

அத் தலைத் தானையன் - சிறந்த அந்தச் சேனையையுடைய தலைவன் (யாரென்றால்); அளவு இல் ஆற்றலன் - அளவற்ற வலிமையுடையவனும்; பொன் முடியன் - பொன்னாலாகிய கிரீடத்தையுடையவனும்; வைத்தலைப் பகழியால் - கூரிய நுனிகொண்ட அம்புகளால்; மழை செய் வில்லினான் - மழை பொழிகின்ற வில்லையுடையவனும்; முக்கணான் கைத்தலை - மூன்று கண்களையுடையவனான சிவபிரானின் கையிலுள்ள; சூலமே அனைய காட்சியான் - சூலம் போன்ற தோற்றத்தையுடையவனுமாகிய; முத் தலைக் குரிசில் - மூன்று தலைகளையுடைய திரிசிரா என்னும் வீரனாவான்.

திரிசிரா என்னும் படைத் தலைவனின் தன்மையை இம் பாடல் கூறுகிறது. மூன்று தலைகளைக் கொண்டமைக்கும், அழித்தல் தொழில் செய்யுங் கொடுமைக்கும் சிவபெருமானின் சூலம் உவமையாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The leader of that army, of boundless strength,
  2. was the three-headed hero with golden crowns, who looked
  3. like the trident in the hand of the three-eyed god,
  4. and whose bow rained down sharp-pointed arrows.

What the poem says

The poet introduces the commander of this new host, Tiricirā, the three-headed demon. He is immensely strong, wears golden crowns, and his bow pours arrows like rain.

He is compared to the trident in the hand of Civaṉ, the three-eyed god: its three prongs match his three heads, and like that weapon he exists to destroy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at talait tāṉaiyaṉ, aḷavu il āṟṟalaṉ,
mut talaik kuricil, poṉ muṭiyaṉ, mukkaṇāṉ
kaittalaic cūlamē aṉaiya kāṭciyāṉ,
vait talaip pakaḻiyāl maḻai cey villiṉāṉ.