கம்பராமாயணம் 3071 · ஆரணிய 6.114

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னவன் நடுவுற - அத்தகைய திரிசிரன் என்பவன் நடுவிலே பொருந்தியிருக்க; 'ஊழி ஆழி ஈது' என்ன - ஊழிக் காலத்துப் பெருங்கடல் இதுவென்று சொல்லும்படி; எங்கணும் வந்து - எல்லாப் பக்கங்களிலும் வந்து; இரைத்த சேனையுள் - ஆரவாரித்த அரக்கர் சேனையிலே; தன் நிகர் வீரனும் - (வேறு உவமையில்லாது) தன்னைத் தானேயொத்த வீரனான இராமனும்; தமியன் வில்லினன் - தனியே வில்லையேந்தியவனாய்; துன் இருள் இடையது - அடர்ந்த இருளின் நடுவேயுள்ள; ஓர் விளக்கின் - ஒரு விளக்குப் போல; தோன்றினான் - விளங்கினான்.

திரிசிரா நடுவிலே பொருந்திய அரக்கச் சேனைகள் தன்னைச் சூழ்ந்து நிற்க அவர்களுக்கு நடுவே இராமபிரான் இருளிடையே தோன்றும் விளக்குப் போல விளங்கினான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With him at its centre, in the army that came from everywhere
  2. roaring, so that one would say, 'This is the ocean at the end of the age,'
  3. the hero who has no equal but himself, alone with his bow,
  4. shone like a single lamp in the midst of dense darkness.

What the poem says

Tiricirā stands at the heart of a demon army that surges in from every side, loud as the ocean that floods the world at the end of an age.

In the middle of it Irāmaṉ stands alone with his bow, a hero comparable only to himself, and he shines like a single lamp in thick darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaṉ naṭuvuṟa, ūḻi āḻi ītu
eṉṉa vantu eṅkaṇum iraitta cēṉaiyuḷ,
taṉ nikar vīraṉum tamiyaṉ villiṉaṉ
tuṉ iruḷ iṭaiyatu ōr viḷakkiṉ tōṉṟiṉāṉ.