கம்பராமாயணம் 3072 · ஆரணிய 6.115

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓங்கிய வாளினன் , உருமின் ஆர்ப்பினன் ,
வீங்கிய கவசத்தன் , வெய்ய கண்ணினன் ,
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக , நேர்
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால் .

பொருள் · Meaning in Tamil

ஓங்கு ஒளி வாளினன் - மிக்க ஒளியையுடைய வாளையுடையவனும்; உருமின் ஆர்ப்பினன் - இடி போன்ற முழக்கத்தையுடையவனும்; வீங்கிய கவசத்தன் - பெரிய கவசத்தையுடையவனும்; வெய்ய கண்ணினன் - கொடிய கண்களையுடையவனுமான; ஆங்கு அவன் - அங்கே வந்த திரிசிரா என்னும் அரக்கனுடைய; அணிக்கு - படை வகுப்புகளுக்கு; எதிர் அணிகள் ஆக - எதிர்ப்படை வகுப்புக்களாக; இராமனும் - இராமபிரானும்; சரத்தின் தானையால் - அம்புகளாகிய சேனையால்; நேர் தாங்கினன் - எதிரிட்டு நின்றான்.

நான்கு படைகளமைந்த திரிசிரனது படை வகுப்புக்கு எதிரில் இராமன் அம்புகளைக் கொண்டு படை வகுத்திட்டான் என்பது.

அதாவது கரனது சேனையில் எத்துணை யானை தேர் குதிரை காலாள்களுண்டோ அத்துணை யம்புகளை இராமன் அவற்றின் மேல் ஒழுங்காக எதிர் தொடுத்தான் என்பது இதன் கருத்தாகும். அரக்கனது பலவகைச் சேனையைத் தடுக்கத் தன்னிடம் போதிய படையில்லாக்குறையை இராமபிரான் தன் அம்புகளால் நிரப்பித் தடுத்து எதிர்த்தான் என்பது நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Against the ranks of him who bore a sword of towering light,
  2. who roared like thunder, wore swelling armour and had cruel eyes,
  3. there, as opposing ranks,
  4. Irāmaṉ too held firm with an army of arrows.

What the poem says

Tiricirā advances with a gleaming sword, a thunderous roar, massive armour and fierce eyes, leading a full four-part army of elephants, chariots, horses and foot soldiers.

Irāmaṉ has no army of his own, so he makes one out of arrows. For every elephant, chariot, horse and soldier he sends an arrow, arranged rank against rank, so that his shafts become a whole opposing host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṅku oḷi vāḷiṉaṉ, urumiṉ ārppiṉaṉ,
vīṅkiya kavacattaṉ, veyya kaṇṇiṉaṉ,
āṅku avaṉ aṇikku etir aṇikaḷ āka, nēr
tāṅkiṉaṉ irāmaṉum carattiṉ tāṉaiyāl.