கம்பராமாயணம் 3074 · ஆரணிய 6.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொடியொடு - (தேர்களின் மேல் பறந்த) கொடிகளும்; கொடுஞ்சு இற - தேர் உறுப்பாகிய கொடிஞ்சி முறியவும்; புரவிக் கூட்டு அற - குதிரைகளின் தொகுதிகள் துணிபட்டழியவும்; பருத்த தேர் - பெரியதேர்கள்; படியொடு படிந்தன - நிலத்திலே சாய்ந்தன; பணை நெடிய வன் கடகரி - பருத்து உயர்ந்த வலிய மத யானைகள்; நெற்றியின் இடியொடு - தன் உச்சியில் விழுந்த இடியால்; முறிந்து வீழ்சிகரம் என்ன - இடிந்து விழுகின்ற மலைச் சிகரங்கள் போல; புரண்ட - கீழே விழுந்து புரண்டன; ஏ - ஈற்றசை.
கொடிஞ்சி - தேர்த் தட்டின் முன் கைக்கு உதவியாகத் தாமரை மொட்டு வடிவில் அமைத்துத் தொங்கவிட்டிருக்கும் ஓர் அழகிய உறுப்பு: கொடுஞ்சு என இங்கே குறிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their flags, their chariot-posts broken and their teams of horses cut away,
- the massive chariots sank down on the ground; and the huge,
- tall, mighty rutting elephants rolled over,
- like peaks that break and fall when thunder strikes their brows.
What the poem says
The slaughter reaches the chariots and elephants. Flags fall, the ornamental front posts of the chariots snap, the horse teams are cut loose, and the great chariots collapse to the ground.
The huge war elephants topple and roll like mountain peaks struck on the summit by a thunderbolt. The chariot-post, kotiñci, is a lotus-bud shaped handhold at the front of the chariot platform.