கம்பராமாயணம் 3075 · ஆரணிய 6.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இற்றவர் - தலையறுபட்ட அரக்கர்கள்; சிரம் அற்றன என - (தம்) தலைகள் அறுபட்டனவென்று; அறிதல் தேற்றலர் - அறியாதவர்களாய்; கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார் - வெற்றி தரும் கொடிய வில்லிலிருந்து அம்புகளைப் பூட்டியெய்வார்கள்; இறாதவர் - தலையறுபடாதவர்கள்; எழுந்து - எழுந்து; விண்ணினைப் பற்றின மழை என - ஆகாயத்தைக் கவிந்த மழை போல; படை வழங்குவார் - போர்க் கருவிகளை வீசுவார்கள்.
தலை அற்றமை தெரியாத பேராவேசம் விளங்குகிறது. இச் செய்யுளில் தலையறுபட்டவர் தலையறுபடாதவர் ஆகிய இரு வகை யரக்கர்களின் போர்ச் செயல்கள் குறிக்கப் பெறுகின்றன. ஒப்பு: 'அடுசிலைப் பகழி தொடுத்து விடப் புகுமளவினில் அயலெதிர் விட்டவர் வெட்டின உடல் சில இரு துணிபட்டன பட் பின் ஒரு துணி கருதும் இலக்கை யழிக்குமே' (க. பரணி 421)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not knowing that their heads had been cut off,
- those who were cut down still fitted arrows to their cruel, conquering bows and drew;
- those not cut down rose up and, like rain
- that has seized the whole sky, showered their weapons.
What the poem says
The demons fight in such a frenzy that some whose heads have already been struck off do not realise it and go on fitting arrows to their bows. Those still whole leap up and pour weapons down like rain covering the sky.
A parallel is drawn with a war poem in which a severed body, already split in two, still destroys the target it aimed at.