கம்பராமாயணம் 3076 · ஆரணிய 6.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேடகத் தடக் கைய - கேடகம் என்னும் படைக் கருவியையேந்திய பெரிய கையையுடையனவும்; கிரியின் தோற்றத்த - மலை போன்ற வடிவையுடையனவும்; ஆடகக் கவசத்த - பொன்னாலாகிய கவசங்களையுடையனவுமாகிய; கவந்தம் ஆடுவ - தலையற்ற உடற் குறைகள் துடித்துத் துள்ளுவன; பாடகத்து அரம்பையர் மருள - பாடகமாகிய காலணியையணிந்த தேவமாதர்கள் மயங்கும்படி; பல்வித நாடகத் தொழிலினை - பல வகைப்பட்ட நடனத் தொழில்களை; நடிப்ப ஒத்த - நடித்துக் காட்டுவன போன்றன.
தலை அறுபட்ட வீரர்களின் உடற்குறைகள், ஆடல் வல்ல தேவமாதர்களும் கண்டு வியக்கும்படி, பலவாறு விசித்திரமாகக் கூத்தாடின என்பது.
அரம்பையர் என்பது இங்கே பொதுவாகத் தேவ மகளிரைக் குறிக்கும். பாடகம் - ஒரு வகைக் காலணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Headless trunks with shields in their great hands,
- shaped like mountains, wearing golden armour, leapt about
- and seemed to act out many kinds of dance,
- so that the anklet-wearing heavenly dancers were amazed.
What the poem says
On the battlefield the headless bodies of the demons, still gripping their shields and clad in golden armour, jerk and leap. They seem to perform every kind of dance, so strangely that even the dancing women of heaven, who wear the anklet called pāṭakam, watch in wonder.