கம்பராமாயணம் 3077 · ஆரணிய 6.120

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உதிர ஆறு - (போர்க் களத்தில் பெருகியோடிய) இரத்த ஆறுகள்; கவரி வெண்குடை - வெண் சாமரங்களும் வெண் குடைகளும்; எனும் நுரைய - என்கின்ற நுரைகளைக் கொண்டன; கைம் மலைச் சுவரின - இறந்த யானைகளாகிய பக்கச் சுவர்களையுடையனவாயின; கவந்தம் ஆழ் சுழிய - குறையுடல்கள் ஆழத்தக்க சுழிகளையுடையன; தண் துறை - குளிர்ந்த நீர்த்துறைகளிலே; பவர் இனப் படு மணி குவிக்கும் - நெருங்கிய பலவகைப்பட்ட இரத்தினங்களைக் கொண்டு வந்து குவிக்கின்ற; பண்ணைய - சேணங்களாகிய படகுகளையுடையவையான; உவரியைப் புதுக்கின - கடலைப் புதியதாக்கின.

போரில் அறுபட்ட படைகளின் உதிரப் பெருக்கின் வருணனை கூறியது இது. 'உவரியைப் புதுக்கின' என்பதன் விளக்கம் வருமாறு: ஆற்றின் புது வெள்ளம் வேகமாகச் சென்று கடலிலே விழுந்து நெடுந்தூரம் கடலின் நிறத்தை வேறுபடுத்திக் கரிய கடலைச் செந்நிறமாக்கின.

கைம்மலை: யானை சுவர் இங்கே கரை எனும் பொருளினது. உவமேயமாகிய சேணமும் உவமானமாகிய படகும் என இரு பொருளையும் 'பண்ணை' என்ற ஒரு சொல்லே தந்துள்ளது - சிலேடையுருவகவணி.

சேணங்களில் பல வகையிரத்தினங்கள் பதிப்பதும் படகுகளில் பல வகை இரத்தினங்களைக் கொண்டு வந்து சேர்த்தலும், கருதிப் பண்ணைக்குப் 'பவரினப் படுமணி குவிக்கும்' என்ற அடைமொழி கொடுத்தார். அரோ - ஈற்றசை.

நதிக்கு அமையக் கூடிய நுரை சுவர், சுழி பண்ணை முதலியன இரத்த ஆற்றுக்கும் உள்ளனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With yak-tail whisks and white parasols for foam, with walls
  2. of fallen elephants, with whirlpools where headless trunks sank, and at their cool fords
  3. with saddles for boats that heap up gems of many crowded kinds,
  4. the rivers of blood made the salt sea new.

What the poem says

The poet pictures the blood of the slain as rivers. The white whisks and parasols floating on them are their foam, the dead elephants are their banks, and the headless bodies sink in their whirlpools.

The jewelled saddles drifting at the fords are boats unloading gems; one Tamil word, paṇṇai, means both saddle and boat, so the figure works as a pun. Pouring into the sea, these red floods turn the dark water red far from shore, as a river in fresh spate does, and so 'make the ocean new'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kavari veṇ kuṭai eṉum nuraiya, kaimmalaic
cuvariṉa, kavantam āḻ cuḻiya, taṇ tuṟai
pavar iṉappaṭu maṇi kuvikkum paṇṇaiya,
uvariyaip putukkiṉa utira āṟu arō.