கம்பராமாயணம் 3078 · ஆரணிய 6.121

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சண்ட வெங் கடுங்கணை - வலிய மிகக் கொடிய இராம பாணங்கள்; தடிய - தாக்கிக் கொன்றமையால்; திண் திறல் வளை எயிற்று சில அரக்கர் - மிக்க வலிமையையும் வளைவான கோரைப் பற்களையுமுடைய சில அரக்கர்கள்; தேவர் ஆய் - (வீர சொர்க்கம்பெறும்) தேவர்களாகி; வண்டு உழல் புரிகுழல் மடந்தைமாரொடும் - வண்டுகள் சூழ்ந்து மொய்க்கத்தக்க பின்னிய கூந்தலையுடைய தெய்வ மகளிருடனே (கூடி); தம் உடல் கவந்த நாடகம் கண்டனர் - தங்களுடைய உடற்குறைகளின் கூத்தாட்டத்தைப் பார்த்தார்கள்.

தாம் - அசை. அரக்கரது உடல் இராமனது அம்புகளால் சின்னபின்னப்பட்டுத் துடித்துத்துள்ள உயிர் உடனே தேவரின் உடம்பையுற்று அரம்பையரோடு கூடி அந்த உடம்புகளின் ஆட்டத்தை வியந்து கண்டன என்பது. இராமபாணம் பட்டு இறந்தோர் விரைவில் சொர்க்கமெய்தித் தெய்வ மகளிரோடு மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது இதனால் விளங்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the fierce, cruel, harsh arrows had slain them, some
  2. demons of firm strength and curving fangs, now become gods,
  3. together with women whose braided hair the bees circle,
  4. watched the headless dance of their own bodies.

What the poem says

Struck down by Irāmaṉ's arrows, some of the fanged demons are at once reborn as gods in heaven. Sitting with the celestial women, whose braided hair draws the bees, they look down and watch their own headless bodies dancing on the field.

The point is that anyone killed by Irāmaṉ's arrow reaches heaven at once and lives there in joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṇṭa veṅ kaṭuṅ kaṇai taṭiyat tām cila
tiṇ tiṟal vaḷai eyiṟṟu arakkar, tēvar āy,
vaṇṭu uḻal puri kuḻal maṭantaimāroṭum
kaṇṭaṉar tam uṭal kavanta nāṭakam.