கம்பராமாயணம் 3079 · ஆரணிய 6.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் - சில அரக்கர்கள்; அமரர் ஈட்டத்தர் - போரில் இறந்து தேவர் கூட்டத்தில் சேர்ந்தவர்களாய்; ஆய் வளை மகளிரொடு - சிறந்த வளையல்களையுடைய தேவமாதர்களுடன்; தூய வெங் கடுங் கணை துணித்த - தூய்மையான மிகக் கொடிய இராம பாணங்களால் துண்டிக்கப்பட்ட; தங்கள் தோள் - தம்முடைய தோள்களை; பேய் ஒருதலை கொள - ஒரு பக்கம் பேய்கள் பற்றிக் கொள்ள; பிணங்கி - (அவற்றோடு) மாறுபட்டு; வாய்விடா நாய் ஒரு தலை கொள - வாயால் பற்றியதை விடாத நாய்கள் மற்றொரு பக்கத்திலே கவ்விக் கொள்ளக் (கண்டு); நகையுற்றார் - வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தார்கள்.
ஆய்வளை - வளைகள் பலவற்றுள் தெரிந்தெடுத்த வளை; ஆய்தல் - தேர்ந்தெடுத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some, now among the company of the gods with women wearing choice bangles,
- seeing their own arms, severed by the pure, cruel, harsh arrows,
- seized at one end by ghouls and, in a tug of war,
- at the other end by dogs that never let go, burst out laughing.
What the poem says
Other demons, already reborn among the gods and seated with bangled heavenly women, look down at their own severed arms on the battlefield. Ghouls pull at one end and dogs, which never release what they bite, pull at the other.
Watching this tug of war over their old limbs, they laugh. The arrows are called pure because death by them purifies.